Home
Mobile

பிப்ரவரியில் களமிறங்கும் மிரட்டலான மோட்டோ ஜி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்.!

கடந்த ஆண்டின் அறிக்கை ஒன்றில் லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் பிப்ரவரி 2019 இல் மோட்டோ ஜி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டின் அறிக்கை ஒன்றில் லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் பிப்ரவரி 2019 இல் மோட்டோ ஜி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்தச் செய்தி உண்மையாகி உள்ளது.

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 துவங்குவதற்கு முன்னதாகவே மோட்டோ ஜி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தற்பொழுது மோட்டோரோலா நிறுவனம், பிரேசிலில் ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மோட்டோ ஜி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்போகிறதென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 7 | ஜி 7 சீரிஸ் அறிமுகம்

பிப்ரவரி 7 | ஜி 7 சீரிஸ் அறிமுகம்

மோட்டோரோலா திட்டமிட்டுள்ள நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி சாவோ பாலோ பிரேசில் இல் நடைபெறுகிறது. மோட்டோரோலா நிறுவனம் பத்திரிகை மற்றும் செய்தி ஊடகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மோட்டோரோலா திட்டமிட்டுள்ள நிகழ்ச்சி பிப்ரவரி 7 ஆம் தேதி நிகழ்வதினால் இது நிச்சயம் மோட்டோ ஜி 7 சீரிஸ் இன் அறிமுகத்தைக் குறிக்கிறதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

நான்கு புதிய ஜி7 ஸ்மார்ட்போன் மாடல்

நான்கு புதிய ஜி7 ஸ்மார்ட்போன் மாடல்

கடந்த ஆண்டு மோட்டோ ஜி சீரிஸ் இன் கீழ் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 ப்ளே மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் என்ற மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து தற்பொழுது அனைவரும் எதிர்பார்க்கும் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி7 பவர் என்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளே

வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளே

மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன்கள் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் கூடிய டூயல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும். மோட்டோ ஜி7 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்று நாட்சுடன் வெளிவருமென்று ஏதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்களுடன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Motorola schedules an event on February 7 in Brazil likely to announce Moto G7 series smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X