Home
Mobile

ஏப்ரல் 19: அசத்தலான மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1440×720 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளஸ், மோட்டோ ஜி6 பிளே போன்ற ஸ்மார்ட்போன்கள் வரும் ஏப்ரல் 19-ம்
தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். குறிப்பாக மோட்டோ ஜி6 பிளஸ், மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி6:

மோட்டோ ஜி6:

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும்.
மேலும் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு அம்சம் மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி அடக்கத்தை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி6
சாதனம்.

மோட்டோ ஜி6 கேமரா:

மோட்டோ ஜி6 கேமரா:

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி
பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இக்கருவியில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி6 பிளே:

மோட்டோ ஜி6 பிளே:

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1440×720 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும்.மேலும் ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி6 பிளே கேமரா:

மோட்டோ ஜி6 பிளே கேமரா:

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ்
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும்.

மோட்டோ ஜி6 பிளஸ்:

மோட்டோ ஜி6 பிளஸ்:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.93-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும்.மேலும் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக கொரில்லா
கண்ணாடி 3 பாதுகாப்பு அம்சம் மற்றும் 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி அடக்கத்தை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி6 பிளஸ் சாதனம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
 மோட்டோ ஜி6 பிளஸ் கேமரா:

மோட்டோ ஜி6 பிளஸ் கேமரா:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும்
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் 3200எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன்
இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Motorola schedules an event on April 19 Moto G6 series expected; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X