Home
Mobile

கொஞ்சம் கேப்பு விடுங்க.. மீண்டும் ஒரு 5ஜி போனை கொண்டுவரும் Motorola.. 50MP கேமரா.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?

சமீபத்தில் தான் மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். அதாவது மோட்டோரோலா எஸ்50 (Motorola S50) எனும் போனை தான் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது TENAA சான்றிதழ் தளத்தில் இந்த மோட்டோரோலா எஸ்50 ஸ்மார்ட்போன் XT2409-5 என்ற மாடல் எண் உடன் காணப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். சீனாவில் அறிமுகமானதும் ஒரு சில வாரங்களில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

கொஞ்சம் கேப்பு விடுங்க.. மீண்டும் ஒரு 5ஜி போனை கொண்டுவரும் Motorola..

அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எஸ்50 ஸ்மார்ட்போன். மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எஸ்50 அம்சங்கள் (Motorola S50 Specifications): 6.36-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எஸ்50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 x 2670 பிக்சல், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் ( Dimensity 7300 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எஸ்50 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 ( Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 10ஜிபி ரேம் +256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் மோட்டோரோலா எஸ்50 போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா (50MP primary camera) + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் (ultrawide sensor) + 10எம்பி டெலிபோட்டோ சென்சார் (telephoto sensor) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா எஸ்50 போன் அறிமுகமாகும். மேலும் இந்த ரியர் கேமராக்கள் 3X ஆப்டிகல் ஜூம் (3x optical zoom) வசதியைக் கொண்டுள்ளன. எனவே இந்த போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எஸ்50 ஸ்மார்ட்போன். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது

4310எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோரோலா எஸ்50 போன் அறிமுகமாகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.25,000-க்கு கீழ் மோட்டோரோலா எஸ்50 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo courtesy: 91mobiles

Best Mobiles in India

English summary
Motorola S50 key specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X