Home
Mobile

மோட்டோரோலா வழங்கும் புதிய எக்ஸ்-109

By Super
மோட்டோரோலா வழங்கும் புதிய எக்ஸ்-109
தரமான மலிவு விலை மொபைல் வாங்க வேண்டுமா? மோட்டோரோலா மோட்டோகீ மினி எக்ஸ்-109 வரவிருக்கிறது. இது 87 கிராம் எடையுடன் 102 X 59.5 X 12.8 அளவில் வரவிருக்கிறது. இதன் டிஎப்டி டிஸ்ப்ளே 2 இன்ச் அளவில் 220 X 176 பிக்ஸலுடன் உள்ளது.

இது க்யூவெர்ட்டி லெயவுட் பெற்றுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி விரிவுபடுத்தக்கூடிய 50 எம்பி ஆகும். மேலும் எக்ஸ்டர்னல் மைக்ரோஎஸ்டி வசதியுடன் கூடிய 23ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய அளவு சேமிப்பு வசதியும் இந்த மொபைலில் உள்ளது. அதே போல் 2ஜிபி மெமரி கார்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோகீ மினி எக்ஸ்-109ன் 2 எம்பி கொண்ட பின்புற கேமராவை கொண்டுள்ளது. இந்த கேமரா 1600 X 1200 பிக்ஸலைக் கொண்டிருக்கிறது. இதன் வீடியோவை 14 எப்பிஎஸ் அளவில் ரிக்கார்ட் செய்ய முடியும். ஆனால் வீடியோ காலிங் செய்ய இந்த மொபைலில் முகப்புக் கேமரா இல்லை.

தகவல் பரிமாற்றத்திற்காக இதன் டிவைஸ் இடிஜிஇயுடன் ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் மோட்டோரோலா மோட்டோகீ மினி எக்ஸ்-109 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யாது. மேலும் இது எ2டிபி மற்றும் இடிஆருடன் கூடிய ப்ளூடூத் 2.1 பெற்றிருப்பதால் இதில் தகவல் பரிமாற்றம் செய்வது மிக எளிதாக இருக்கிறது. இதன் யுஎஸ்பி போர்ட் மூலம் ஸின்க்ரோனைஸ் செய்யலாம். மேலும் இதன் போர்ட் மைக்ரோயுஎஸ்பி வி2.0 ஆகும்.

மோட்டோரோலா மோட்டோகீ மினி எக்ஸ்109ன் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இதனுடைய டூவல் சிம் வசதியாகும். இதனால் நாம் இரண்டாவது மொபைல் வாங்க வேண்டிய தேவை இருக்காது.

மேலும் இது மல்டி பைல்களை சப்போர்ட் செய்யும் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களைக் கொண்டிருக்கிறது. எனவே இது எம்பி3, எஎசி, டபுள்யுஎவி போன்ற ஆடியோ பைல்களையும் எம்பி4 போன்ற வீடியோ பைல்களையும் எளிதாக இயக்கிவிடும்.

மோட்டோரோலா மோட்டோகீ மினி எக்ஸ்109 பொதுவான ஆர்கனைசர் மற்றும் அடிப்படை வசதிகளையும் ப்ரடிக்டிவ் இன்புட் மற்றும் வாய்ஸ் மெமோ போன்ற வசதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

மோட்டோரோலா மோட்டோகீ மினி எக்ஸ்109ன் மின்திறனை பார்த்தால் எல்ஐ-ஐயன் 750எம்எஹச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த போனில் தொடர்ந்து 8.20 மணி நேரம் பேச முடியும். அதே போல் இதனுடைய ஸ்டாண்டர்ட் பேட்டரி பேக்கப் 500 மணி நேரமாகும்.

இத்தனை சிறப்பம்சங்களுடன் கூடிய மோட்டோரோலா மோட்டோகீ மினி எக்ஸ்109ன் விலை ரூ. 3000 மட்டுமே. எனவே இந்த மொபைலை அடித்தட்டு மக்களும் எளிதாக வாங்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X