Home
Mobile

பேஸ்புக் பட்டனுடன் புதிய ஸ்மார்ட்போன்: மோட்டோரோலா அறிமுகம்

By Super
பேஸ்புக் பட்டனுடன் புதிய ஸ்மார்ட்போன்: மோட்டோரோலா அறிமுகம்
வாடிக்கையாளர்களின் விருப்பத்தையே தாரக மந்திரமாகக் கொண்டு மாடல்களை உருவாக்குகிறது மோட்டரோலா நிறுவனம். மோட்டரோலா நிறுவனம் இப்பொழுது மிகவும் ஸ்மார்டாக ஒரு போனை அறிமுகம் செய்ய உள்ளது.

மோட்டோரோலா இஎக்ஸ்-225 என்பதே அந்த ஸமார்ட்போன் மாடல். இந்த மாடல் ஃபேஸ்புக் காம்பாட்டிபிலிட்டி கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐஎன்க்யூ, வோடபோன், எச்டிசி போன்ற அனைத்து நிறுவனங்களும் ஃபேஸ்புக் வசதிகொண்ட ஸ்மார்ட் போன்களை அறி்முகப்படுத்திவிட்டன. அந்தப் பட்டியலில் இப்பொது மோட்டாரோலா மாடலும் சேர்ந்துவிட்டது.

எச்டிசி சச்சா,வோடபோன்-555 புளூ மாடல்களில் உள்ளது போன்று,டைப் செய்வதற்கு எளிதான வகையில் கிவெர்ட்டி கீபோர்டு வசதியும் கொண்டுள்ளது. இதன் கீபோர்டில் ஓஎஸ் டெவலப்டு ஃபேஸ்புக் பட்டன் உள்ளது. மோட்டாரோலா இஎக்ஸ்-225 மாடலின் விவரங்கள் அனைத்தும் புளூடூத் ஆர்க் வலைத்தலத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் வெளிப்புறத்தோற்றம் மோட்டரோலா சார்ம்,மோட்டரோலா ட்ராய்டு ப்ரோ மாடலைப் போல் உள்ளது. மோட்டாரோலா இஎக்ஸ்-225 ஆன்ராய்டு 2.2 ஃப்ரையோ வசதி கொண்டுள்ளது.மனதில் பட்ட காட்சிகளை பட்டென்று கிளிக் செய்ய 3.2 மெகா பிக்செல் கேமிரா வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தொழில் நுட்பங்கள் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

கண்களை அகலமாக விரிக்க வைக்கின்றது இதில் உள்ள இதர வசதிகள். இதில் சிங்கில் மற்றும் டியூவல் சிம் வசதிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் வைபை,ஜிபிஆர்எஸ்,எட்ஜ் போன்ற தகவல் தொடர்பு வசதிகள் உள்ளன.

2.1 ஏ2டிப்பி புளூடூத் வசதிகளும் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து கொடுக்கப்பட்டுள்ளன. அழகான தருணங்களில் பிடித்தப் படங்களை ஃபேஸ் புக்கில் இந்த ஹேண்ட்செட்டின் மூலம் எளிதாக அப்லோட் செய்து கொள்ளலாம்.

அந்த அளவு எளிமையான முறையில் ஹெச்டிசி,வோடாஃபோன் போன்ற மாடல்களிளும் கூட இல்லை என்று கூறலாம். இதனுடைய அறிய பல வசதிகளினால் வாடிக்கையாளர்களின் மனதில் நிலைத்து நிற்கும் என்று நம்பகமாக கூறமுடியும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.இத்தகைய நவீன மாடலை வாங்குவதற்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X