Home
Mobile

சத்தமில்லாமல் இன்பதிர்ச்சி கொடுத்த Motorola.. ஆண்ட்ராய்டு 17 beta அப்டேட்.. எந்தெந்த போன்களுக்கு தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் மோட்டோரோலா நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு 17 அப்டேட் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 17 பீட்டா அப்டேட்டை வெளியிட தொடங்கி உள்ளது. சமீபத்தில் வெளியான Ytechb-இன் அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டு 17 பீட்டா அப்டேட்டை பெற்ற முதல் போன் மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) ஸ்மார்ட்போன் ஆகும்.

சத்தமில்லாமல் இன்பதிர்ச்சி கொடுத்த மோட்டோரோலா..

அதை தொடர்ந்து மோட்டே ஜி57 பவர் (Moto G57 Power) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) போன்களுக்கு ஆண்ட்ராய்டு 17 பீட்டா அப்டேட் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அப்டேட் பதிவிறக்க அளவு சுமார் 4GB ஆகும். இந்தியா, பிரேசில் போன்ற குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டும் இந்த அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் உள்ள பயனர்களுக்க இந்த அப்டேட் கிடைக்கும்.

மோட்டோரோலா சிக்னேச்சர் - A171WVH.13
மோட்டோ ஜி57 பவர் - A171WAAH.16
மோட்டோரோலா எட்ஜ் 70 - A171WRH.22

ஆண்ட்ராய்டு 17 பீட்டா பதிப்பானது, லாக் ஸ்கிரீனுக்கான புதிய clock பேஸ்கள், அப்டேட் செய்யப்பட்ட நோட்டிபிகேஷன் பேனல் மற்றும் கண்ட்ரோல் சென்டர், அப்டேட் செய்யப்பட்ட செட்டிங்ஸ் பக்கங்கள், லைவ் ஆக்டிவிட்டிஸ் என பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் மோட்டோரோலா பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் விரைவில் இன்னும் பல மோட்டோரோலா போன்களுக்க இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது மோட்டே ஜி57 பவர் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி57 பவர் அம்சங்கள் (Moto G57 Power Specifications): தரமான ஆக்டா கோர்ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

அதுவும் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

குறிப்பாக மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒடி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor) ஆகிய கேமரா கேமராக்கள் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது. இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

சத்தமில்லாமல் இன்பதிர்ச்சி கொடுத்த மோட்டோரோலா..

7000mAh பேட்டரி இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6.802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-ச் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளன. பான்டோன் ரெகாட்டா, பான்டோன் கோர்செயர், PANTONE Fluidity நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Motorola Rolls Out Android 17 beta Update to These Devices So Far: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X