டியூவல் சிம் வசதியுடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

இதை சற்று தாமதமாக உணர்ந்த வெளிநாட்டு நிறுவனங்களும் அதே யுக்தியை பின்பற்றி குறைந்த விலையில் டியூவல் சிம் போன்களை அறிமுகப்படுத்தும் போக்கை கடைபிடிக்க துவங்கின.
ஆனால், தற்போது ஸ்மார்ட்போன்களையும் டியூவல் சிம் வசதியுடன் அறிமுகம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் மோட்டோரோலா நிறுவனம் எக்ஸ்டி-531 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போனும் இதேபோன்று டியூவல் சிம் வசதியுடன் வந்துள்ளது.
3.2 இஞ்ச் தொடுதிரை வசதிகொண்ட இந்த போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இது 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் வந்துள்ள மல்டி டாஸ்க்கிங் பணிகளில் சிறப்பாக இயங்குகிறது.
ஸ்லீக் வடிவமைப்புடன் வந்துள்ள இந்த போன் 11.95 மிமீ தடிமனும், 114 கிராம் எடையும் மட்டுமே கொண்டது என்பது ஸ்லிம்மை விரும்புவர்களுக்கு நல்ல சாய்ஸ்.
கேமரா இல்லாமல் ஸ்மார்ட்போனா?
கேமரா இல்லாத போன் தற்போது மார்க்கெட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டு வருகின்றன.அதுவும் ஸ்மார்ட்போன் ரகத்தை சேர்ந்தது என்பதால் கண்டிப்பாக நல்ல கேமராவை கொண்டிருக்க வேண்டுமே என்ற உங்களது ஆதங்கத்தை மோட்டோரோலாவுக்கு தெரியாதா?
இதனால், எதிர்பார்ப்பை விஞ்சும் வகையில் தரம் வாய்ந்த 5 மெகாபிக்செல் கேமராவை இதில் பொருத்தியுள்ளது.
வீடியோ ரெக்கார்டிங் மற்றும் துல்லியமான புகைப்படங்களை இந்த கேமரா மூலம் எடுக்கலாம். வீடியோ காலிங் வசதிக்காக முகப்பில் விஜிஏ கேமரா இருக்கிறது.
சேமிப்பு திறனையும் 32 ஜிபி வரை கூட்டிக்கொள்ள முடியும். ஏ-ஜிபிஎஸ் சப்போர்ட்டுடன் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் வேலை செய்கிறது.
இதில், கூகுள் மேப்ஸ், கூகுள் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால் அந்த வசதிகளை உடனடியாக பெற முடியும். வைஃபை, புளூடூத் மற்றும் 3ஜி நெட்வொர்க்கில் செயல்படும் தொழி்ல்நுட்பமும் உண்டு.
1540 எம்ஏஎச் திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி மின் ஆளுமை திறனில் சிறப்பாக இருக்கிறது. இது 8 மணிநேர டாக்டைம் மற்றும் 28 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடு வசதியை கொடுக்கிறது.
ரூ.12,000 விலையில் அறிமுகமாகி இருக்கும் இந்த போன் மற்ற போன்களை ஒப்பிடுகையில் ஏராளமான வசதிகளை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications