டிசம்பரில் சம்பவம் இருக்கு- "பந்தயத்துக்கு ரெடியான மோட்டோ" நீங்க ரெடியா இருங்க மக்களே!

|

ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிவதும் தெரியவில்லை என 2022 ஆம் ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் முடிய இருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் இன்னும் 1 மாதத்தில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். இந்த ஆண்டில் எது கலைக்கட்டியதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகங்கள் ஓஹோனு கலைக்கட்டியது. 2022 இன்னும் முடியவில்லை. டிசம்பர் மாதத்தில் ஏணைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கிறது. இந்த பந்தயத்தில் Motorola நிறுவனத்தின் ஒரு ஸ்மார்ட்போனும் இடம்பெற இருக்கிறது.

Moto X40

Moto X40

மோட்டோ நிறுவனம் Moto X40 ஸ்மார்ட்போனை டிசம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP68 மதிப்பீட்டை கொண்டிருக்கும் என்பதை லெனோவா நிர்வாகி சென் ஜின் உறுதி செய்தார். டிசம்பர் மாதம் அறிமுகமாகும் பல ஸ்மார்ட்போன்களில் இதற்கு பிரதான இடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ எக்ஸ்40 விரைவில் அறிமுகம்

மோட்டோ எக்ஸ்40 விரைவில் அறிமுகம்

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 40 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வருகை குறித்து டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை லெனோவா நிர்வாகி சென் ஜின் வெய்போ மூலம் உறுதிப்படுத்தினார்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

இதன்மூலம் மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதும் டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான ஐபி68 மதிப்பீட்டு ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதும் ஏறத்தாழ உறுதி செய்யப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் டீனா தளத்திலும் காணப்படுகின்றன.

டிசம்பர் மாதம் அறிமுகம்

டிசம்பர் மாதம் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் குறித்த ITHome இன் அறிக்கையின்படி, வரவிருக்கும் மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனானது 68 மதிப்பீட்டை கொண்டிருக்கும் என வெய்போ இடுகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்பதும் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Moto X40 சிறப்பம்சங்கள்

Moto X40 சிறப்பம்சங்கள்

Moto X40 சிறப்பம்சங்கள் குறித்து டீனா தளத்தில் வெளியாகியுள்ள தகவலை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 196 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொறுத்தவரை, Moto X40 ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இது 1080×2400 ரெசல்யூஷனை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. 10 பிட் வண்ண ஆதரவுடன் அண்டர் ஸ்க்ரீன் கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

Moto X40 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி முதன்மை கேமரா 50 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 12 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

4950 எம்ஏஎச் பேட்டரி

4950 எம்ஏஎச் பேட்டரி

வரவிருக்கும் Moto X40 ஸ்மார்ட்போனானது IP68 மதிப்பீட்டு ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனானது 4950 எம்ஏஎச் பேட்டரி அல்லது 4450 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டை கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 18 ஜிபி ரேம் என மூன்று ரேம் வேரியண்ட்களில் வரும் எனவும் இது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள்

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள்

இந்த ஸ்மார்ட்போனானது டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. விரைவில் இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Ready For December Race: Moto X40 to debut with Snapdragon 8 Gen 2 SoC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X