Home
Mobile

இந்தியா: விரைவில் களமிறங்கும் மோட்டோரோலா ரேசர்.! வியக்கவைக்கும் விலை.!

மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கு இந்தியா மற்றும் உலக நாடுகள் இடையே நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

அதன்படி இந்நிறுவனம் அதிநவீன மோட்டோரோலா ரேசர் சாதனத்தை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அல்லது தொலைபேசியின் இந்தியா விலை நிர்ணயம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மோட்டோரோலா ரேசர் 2019 ஆனது கடந்த மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இதன் விலை $1,499 (தோராயமாக ரூ.1,08,200) என
பட்டியலிடப்பட்டது.

6.3-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே

6.3-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே

மோட்டோரோலா ரேசர் 2019 சாதனம் 6.3-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே வசதி மற்றும் 21: 9 விகிதம் மற்றும் 2,142x876 பிக்சல்கள் தீர்மானம் உடையது, பின்பு மூடப்படும்போது 2.7-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

128ஜிபி உள்ளடக்க மெமரி

மோட்டோரோலா ரேசர் சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இ-சிம் ஆதரவு

இ-சிம் ஆதரவு

இந்த மொபைல்போனின் சிப்செட் பற்றி பேசுகையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 701 பிராசஸர் வசதியுடன் வெளிவரும்,பின்பு வலக்கமான சிம் கார்டு ஆதரவுக்கு பதிலாக இ-சிம் ஆதரவுடன் இந்த ரேசர் சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்

16MP பின்புற f/1.7, 1.22um கேமிரா

16MP பின்புற f/1.7, 1.22um கேமிரா

மோட்டோரோலா ரேசர் ஆனது16MP பின்புற f/1.7, 1.22um கேமிரா, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் (AF), லேசர் AF, கலர் கோரேலேட்டட் டெம்பரேச்சர் (CCT) மற்றும் இரட்டை LED ப்ளாஷ் கொண்டுள்ளது. செல்பிக்களுக்கு, இது உள்ளே 5MPசெல்பி f/2.0, 1.12um கேமரா மற்றும் ஸ்கிரீன் பிளாஷ் கொண்டுள்ளது.

 15வாட் பாஸ்ட் சார்ஜிங்

15வாட் பாஸ்ட் சார்ஜிங்

இந்த சாதனத்தில் என்எப்எச், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி, ஸ்பிளாஸ் ப்ரூப் நீர் எதிர்ப்பு நானோகேட்டிங் ஆகியவற்றை கொண்டுள்ளது, பின்பு மடிக்கக்கூடிய தடிமனான அடிதளத்தில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது. மேலும் 2510எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Motorola Razr with foldable screen to arrive in India soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X