அடுத்த Motorola போன் ரெடி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 12ஜிபி ரேம்.. ஏஐ அம்சம்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோரோலா ரேஸர் அல்ட்ரா 2025 (motorola razr ultra 2025) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த மோட்டோரோலா ரேஸர் அல்ட்ரா 2025 ஸ்மார்ட்போன் ஆனத தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் இந்த மோட்டோரோலா ரேஸர் போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா ரேஸர் அல்ட்ரா 2025 அம்சங்கள் (motorola razr ultra 2025 specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா ரேஸர் அல்ட்ரா 2025 போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா ரேஸர் அல்ட்ரா 2025 போன் அறிமுகமாகும். மேலும் மேம்பட்ட ஏஐ அம்சங்கள், 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ரேஸர் அல்ட்ரா 2025 போன் அறிமுகமாகும். தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களுமே வெளியாகும். மேலும் சமீபத்தில்
இந்நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto G35 5G specifications): யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் ரியர் கேமரா ஆதரவுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த போன்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
5000mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்,குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. தற்போது இந்த மோட்டோ ஜி35 5ஜி போன் ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








