ஆப்பிள், சாம்சங்கிற்கு போட்டியாக மோட்டோரோலா!

ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் புதிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி உள்ளது மோட்டோரோலா நிறுவனம். எம்டி-887, எக்ஸ்டி-885 மற்றும் எக்ஸ்டி-889 என்ற பெயர் கொண்ட இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளத்தினை பெறலாம்.
ரேசர் எம்டி-887 ஸ்மார்ட்போனில் 4.3 இஞ்ச் அகன்ற திரையில் மூலம் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவினால் லெட் ஃபிளாஷ் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தலாம். இதனால் குறைந்த வெளிச்சத்திலும், தெளிவான புகைப்படங்களை கொடுக்க முடியும்.
ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் வழங்கும். எக்ஸ்டி-885, எக்ஸ்டி-889 மொபைல்கள் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலாவின் இந்த ரேசர் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரேசர் மேக்ஸ், ரேசர் எச்டி போன்ற புதிய தொழில் நுட்பத்தினை வழங்கும் ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த புதிய ரேசர் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு விஷயம் நிச்சயமாக கூறலாம். சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட அடுத்து மோட்டோரோலா நிறுவனமும் தயாராகி கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications