Home
Mobile

மொத்த சாம்ரஜ்யம் மிரளுது.. 7 வருட OS.. pOLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. புது Moto போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் போல்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியாக மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் போல்டு (Motorola Razr Fold) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்திய வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பீச்சர்களுடன் டிசைன் மற்றும் கலர் விவரங்களும் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.

வருகிற மே 13ஆம் தேதியன்று இந்த மோட்டோரோலா ரேசர் போல்டு ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா (Motorola) தளங்களில் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது.

மொத்த சாம்ரஜ்யம் மிரளுது.. 7 வருட OS.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா ரேசர் போல்டு அம்சங்கள் (Motorola Razr Fold Specifications): 8.1 இன்ச் (2484 x 2232 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. 6.56 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி கவர் டிஸ்பிளே கிடைக்கிறது. மெயின் டிஸ்பிளேவுக்கு அல்ட்ரா தின் கிளாஸ் (Ultra Thin Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

கவர் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 3 (Corning Gorilla Glass Ceramic 3) பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், டால்பி விஷன், எச்டிஆர்10பிளஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 6200 நிட்ஸ் பீக் பிரைட்னஸை மெயின் டிஸ்பிளே கொடுக்கிறது. கவர் டிஸ்பிளேவுக்கு 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

300Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. டால்பி விஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 7 ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது.

7 வருட செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கிடைக்கிறது. 80W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் போல்டு செய்தால் 9.89 எம்எம் தடிமன் வருகிறது.

அன்போல்டு செய்தால், வெறும் 4.5 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 243 கிராம் எடை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா, சோனி லைடியா 828 சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வேடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன் கிடைக்கிறது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெலிபோட்டோவுக்கு சோனி லைடியா 600 சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 32 எம்பி இன்டர்னல் செல்பீ மற்றும் 20 எம்பி எக்ஸ்டர்னல் செல்பீ கிடைக்கிறது. 8K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன், வீடியோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின் (Video Enhancement Engine) கிடைக்கிறது.

மேலும், டால்பி விஷன் ரெக்கார்டிங், பேஸ் ரீடச், மேக்ரோ வீடியோ உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. பான்டோன் பேக்கெண்ட் ப்ளூ (Pantone Blackened Blue), பான்டோன் லில்லி ஒயிட் (Pantone Lily White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorola Razr Fold With Snapdragon 8 Gen 5 To Launch in India on May 13 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X