விலையை சொன்னா நம்புவீங்களா.. 6000mAh பேட்டரி.. 7 OS அப்டேட்.. அறிமுகமானது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ரேசர் போல்ட் (Motorola Razr Fold) போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 7 ஓஎஸ் அப்டேட்கள், 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது மோட்டோரோலா ரேசர் போல்ட் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா ரேசர் போல்ட் அம்சங்கள் (motorola razr fold specifications): 8.1-இன்ச் 2கே எல்டிபிஒ பிஒஎல்இடி (2K LTPO pOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), டால்பி விஷன், 6200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

6.56-இன்ச் எல்டிபிஒ பிஒஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவும் இந்த போனில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 3 பாதுகாப்பு, 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
அக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் உடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 7 ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
50எம்பி சோனி பிரைமரி கேமரா (Sony Lytia 828) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா ரேசர் போல்ட் போன். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் 32 எம்பி இன்டர்னல் செல்பி கேமரா மற்றும் 20 எம்பி எக்ஸ்டர்னல் செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
போஸ் ஆடியோ டியூனிங் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற பல அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன. அதுவும் IP46, IP48 & IP49 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது.
6000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7 802.பிஇ, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ் (GPS), பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மோட்டோரோலா ரேசர் போல்ட் விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ரேசர் போல்ட் விலை ரூ.1,49,999-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ரேசர் போல்ட் விலை ரூ.1,59,999-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ரேசர் போல்ட் (FIFA World Cup '26 Edition) விலை ரூ.1,69,999-ஆக உள்ளது.
பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இணையதளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.10,000 தள்ளுபடியும் உள்ளது. இதுதவிர கூடுதல் சலுகைகளும் இந்த போனுக்கு கிடைக்கும். பான்டோன் பேக்கெண்ட் ப்ளூ (Pantone Blackened Blue), பான்டோன் லில்லி ஒயிட் (Pantone Lily White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications