Home
Mobile

வாய் பிளக்க வைத்த முரட்டு Motorola.. 8.1 இன்ச் போல்டபிள்.. 6.56 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே.. 50MP டிரிபிள் கேமரா!

மோட்டோரோலா நிறுவனத்தின் பிரீமியம் ரேசர் மாடலான மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு (Motorola Razr Fold) ஸ்மார்ட்போன் சிஇஎஸ் 2026 (CES 2026) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 8.1 இன்ச் போல்டபிள், 6.56 இன்ச் அவுட்டர் போன்ற பெரிய டிஸ்பிளேகளை கொண்டுள்ளது. கேமராவிலும் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

உலகளவில் ரேசர் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றன. ஏனென்றால், சாம்சங் நிறுவனத்தின் ஃபிளிப் மற்றும் ஃபோல்டு மாடல்களுக்கு நிகரான பீச்சர்களுடன் அந்த மாடல்களைவிட கம்மியான பட்ஜெட்டில் இந்த மாடல்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலும் ரேசர் சீரிஸ் கீழ் ஃபிளிப் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்போது, அடுத்த கட்டத்துக்கு ரேசர் சீரிஸ் சென்றுள்ளது.

வாய் பிளக்க வைத்த முரட்டு Motorola.. 8.1 இன்ச் போல்டபிள்.. 6.56 இன்ச்!

சிஇஎஸ் 2026 நிகழ்வில் மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசைன், கேமரா, டிஸ்பிளே, கலர் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், பெரிய டிஸ்பிளேகள் மற்றும் பிரீமியம் கேமரா சிஸ்டம் கிடைப்பதால், இப்போதே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு அம்சங்கள் (Motorola Razr Fold Specifications): புல் ஸ்டைல் போல்டபிள் டிசைன் கொண்டுள்ளது. டேப்லெட் மாடல்களுக்கு நிகரான டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 6.56 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 8.1 இன்ச் எல்டிபிஓ (LTPO) மெயின் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 2K ரெசொலூஷன் இந்த டிஸ்பிளேவில் கிடைத்துள்ளது.

டேப்லெட் மாடல்களை போலவே அவுட்புட் கொடுக்க அடாப்டிவ் லேய்அவுட் மட்டுமல்லாமல், மோட்டோ பென் அல்ட்ரா ஸ்டைலஸ் (Moto Pen Ultra Stylus) சப்போர்ட் கொடுக்கிறது. கேட்ச் மீ அப் (Catch me up) மற்றும் நெக்ஸ்ட் மூவ் (Next Move) போன்ற பிரத்யேக ஏஐ பீச்சர்களையும் கொடுத்துள்ளது. சோனி எல்ஒய்டிஐஏ (Sony LYTIA) சென்சார்களுடன் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (மேக்ரோ ஆப்ஷன்) + 50 எம்பி டெலிபோட்டோ கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைத்துள்ளது. மேலும், 3X பெரிஸ்கோப் ஜூமிங் கிடைத்துள்ளது. மெயின் கேமராவுக்கு சோனி எல்ஒய்டிஐஏ சென்சார் கிடைக்கிறது. ஹை-குவாலிட்டி ஜூமிங் டெலிபோட்டோவில் கிடைக்கிறது.

செல்பீகளுக்காக 32 எம்பி அவுட்டர் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. வீடியோ கால்களுக்காக 20 எம்பி இன்னர் செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆகவே, வழக்கமான செல்பீகளில் மட்டுமல்லாமல், ப்ரொபஷனலாக செய்யப்படும் வீடியோ கான்பரன்ஸ், ஜூம் மீட்டிங் போன்றவற்றுக்கும் பிரத்யேக கேமராவை கொடுத்துள்ளது. டால்வி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கிறது.

மேலும், அட்வான்ஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் கொடுத்துள்ளது. பேன்டோன் பிளாகெண்ட் ப்ளூ (Pantone Blackened Blue) மற்றும் பேன்டோன் லில்லி ஒயிட் (Pantone Lily White) ஆகிய இரண்டு கலர்களில் இந்த மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்கள் சிஇஎஸ் 2026 நிகழ்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள், விற்பனை விவரங்கள் மற்றும் முழு பீச்சர்கள் ஓரிரு மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. 2026 ஆம் ஆண்டில் வெளியீடு இருக்க வாய்ப்புள்ளது. சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் மாடலுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அதைவிட மலிவாக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr Fold With 50MP Triple Rear Camera System Unveiled At CES 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X