இப்படி இருக்கனும் ஆஃபர்.. ரூ.10,000 டிஸ்கவுண்ட்.. pOLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. OIS கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு (Motorola Razr Fold) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே ரூ.10,000 தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், ஃபோல்டு ஸ்மார்ட்போன் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,49,999 ஆக இருக்கிறது. எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.1,39,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால், ரூ.14,000 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம்.

ஆகவே, ரூ.1,35,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 7 ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருட செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. பான்டோன் பேக்கெண்ட் ப்ளூ (Pantone Blackened Blue), பான்டோன் லில்லி ஒயிட் (Pantone Lily White) மற்றும் பிபா வேர்ல்ட் கப் 26 எடிஷன் பிளாக் (FIFA World Cup 26 Edition Black) கலர்களில் கிடைக்கிறது.
மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு அம்சங்கள் (Motorola Razr Fold Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
2K ரெசொலூஷன் கொண்ட 8.1 இன்ச் (2484 x 2232 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) உள்ளது. அல்ட்ரா தின் கிளாஸ் (Ultra Thin Glass) புரொடெக்சனை இந்த மெயின் டிஸ்பிளே கொடுத்து இருக்கிறது.
மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 3 (Corning Gorilla Glass Ceramic 3) புரொடெக்சனுடன் 6.56 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி கவர் டிஸ்பிளே கிடைக்கிறது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. டால்பி விஷன், எச்டிஆர்10பிளஸ், 165Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட கவர் டிஸ்பிளேவாக இது இருக்கிறது.
80W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடை்ககிறது. ஓப்பன் செய்தால், 4.5 எம்எம் தடிமன் மட்டுமே கிடைக்கிறது. க்ளோஸ் செய்தால், 9.89 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது.
மொத்தமாக 243 கிராம் எடை கிடைக்கிறது. வீடியோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின் (Video Enhancement Engine) கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 32 எம்பி இன்டர்னல் செல்பீ கிடைக்கிறது. மேலும், 20 எம்பி எக்ஸ்டர்னல் செல்பீ உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வேடு கேமரா 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா இந்த மோட்டோவில் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications