Home
Mobile

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புதிய மோட்டோரோலா போன்.. 7 ஓஎஸ் அப்டேட்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ரேசர் போல்ட் (Motorola Razr Fold) நாளை (மே 13) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். தற்போது இந்த போனின் முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோரோலா ரேசர் போல்ட் அம்சங்கள் (Motorola Razr Fold specifications): இந்த மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் 8.1-இன்ச் LTPO 2கே ஒஎல்இடி மெயின் டிஸ்பிளே உடன் வெளிவரும். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 6200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், எச்டிஆர்10பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் அல்ட்ரா தின் கிளாஸ் (Ultra Thin Glass) பாதுகாப்பு வசதி உள்ளது.

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புதிய மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ரேசர் போல்ட் போனில் 6.6-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இந்த டிஸ்பிளே 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப் (Qualcomm's Snapdragon 8 Gen 5 chip) வசதியைக் கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா ரேசர் போல்ட் போன். இது மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதுவும் சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

50எம்பி சோனி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா ரேசர் போல்ட் போன். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் 32 எம்பி இன்டர்னல் செல்பி கேமரா மற்றும் 20 எம்பி எக்ஸ்டர்னல் செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

அதுவும் 8K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங், அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன், வீடியோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின் (Video Enhancement Engine) போன்ற பல சிறப்பான வசதிகள் இதில் உள்ளன. அதேபோல் டால்பி விஷன் ரெக்கார்டிங், பேஸ் ரீடச், மேக்ரோ வீடியோ போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புதிய மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?

IP49 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் போல்ட் போன். அதேபோல் இந்த போனில் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. பான்டோன் பேக்கெண்ட் ப்ளூ (Pantone Blackened Blue), பான்டோன் லில்லி ஒயிட் (Pantone Lily White) நிறங்களில் இந்த போன் வெளிவரும். மேலும் இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் ரூ.1,50,000 விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Razr Fold will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X