ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த Motorola போன்.. மே 13-ல் வருகிறது.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ரேசர் போல்ட் (Motorola Razr Fold) போனை வரும் மே 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் அறிமுக தேதி எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா ரேசர் போல்ட் அம்சங்கள் (Motorola Razr Fold specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப் (Qualcomm's Snapdragon 8 Gen 5 chip) வசதியைக் கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா ரேசர் போல்ட் போன். இது மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 8.1-இன்ச் LTPO 2கே ஒஎல்இடி மெயின் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் வெளிவரும். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவி 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
மோட்டோரோலா ரேசர் போல்ட் போனில் 6.6-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இந்த டிஸ்பிளே 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.
அதேபோல் Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு 7 ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதுவும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா ரேசர் போல்ட் போன். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் IP49 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் போல்ட் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன்.


Click it and Unblock the Notifications