சாம்சங் சித்தப்பு.. உனக்கு வைக்கிறேன் ஆப்பு.. 4-இன்ச் இன்னர் டிஸ்பிளேவுடன் Motorola-வின் புது பிளிப் போன்!
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் அடுத்த போல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன. அது மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா (Motorola Razr 70 Ultra) ஸ்மார்ட்போனாகும். இது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 8 மற்றும் ஒப்போவின் மற்ற கிளாம்ஷெல் போல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்பர்ட்பிக் (XpertPick) மற்றும் டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டாஃபர் (Tipster Steve Hemmerstoffer) வழியாக, மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிஏடி ரெண்டர்கள் மற்றும் 360-டிகிரி லுக் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ரேஸர் 70 அல்ட்ரா மாடல் ஆனது மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ராவை போலவே அதே கிளாம்ப்செல் டிசைனை பின்பற்றும்.

அதாவது ஸ்மார்ட்போனை ஓப்பன் செய்யும் போது, டூயல் கேமராக்களை சுற்றி ஒரு பெரிய கவர் டிஸ்பிளேவும், முழு அளவிலான இன்னர் டிஸ்பிளேவும் இருக்கும். இது ஏற்கெனவே சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பாகும், குறிப்பாக ஸ்மார்ட்போனை விரிக்காமலேயே ஆப்களை விரைவாக பயன்படுத்துவதற்கு இது மிகவும் ஏற்றது. ஆக அடுத்த மாடலிலும் அதே டிசைன் தக்கவைக்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
மேலும் லீக் ஆன ரெண்டர்களில், பேக் பேனலில் உள்ள பினிஷ் அதிக உலோக தன்மையுடன் காணப்படுகிறது. இது, முன்பு காணப்பட்ட அல்காண்டரா அல்லது வுட் போன்ற சோதனை ரீதியான பொருட்களிலிருந்து மாறுபட்டுள்ளது. இருப்பினும், அந்த பொருட்களுடன் வேறு பினிஷ்களும் இருக்கலாம். இடதுபுறத்தில் பிரத்யேக மோட்டோ ஏஐ பட்டனும், வலதுபுறத்தில் வழக்கமான பவர் மற்றும் வால்யூம் பட்டன்களும் என, இதன் ஃபிரேம் அமைப்பும் கூட நடைமுறைக்கு ஏற்றதாகவே உள்ளது.
லீக் ஆன அளவுகளின்படி, கேமரா பம்ப் உடன் சேர்த்து மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் தடிமன் சுமார் 17.63 மிமீ வரை உயர்கிறது. இது தற்போதைய மாடலை விட சற்று தடிமனாகும். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு பின்னடைவாக தோன்றலாம், ஆனால் நடைமுறையில் இது பெரும்பாலும் ஒரு பெரிய பேட்டரி அல்லது மேம்படுத்தப்பட்ட கேமரா ஹார்ட்வேருக்காக செய்யப்பட்ட மாற்றமாக இருக்கலாம்.
ஒட்டுமொத்த உயரம் மற்றும் அகலம் கிட்டத்தட்ட மாறாமல் இருப்பதால், கையில் பிடிக்கும்போது இது வழக்கமான உணர்வையே தரலாம். டிஸ்ப்ளேக்களும், உட்புறம் சுமார் 7 அங்குலமாகவும், வெளிப்புறம் 4 அங்குலமாகவும் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான பிளிப் / போல்ட் மாடல்களை மோட்டோரோலா "மறுபடியும்"துவம்சம் செய்யவுள்ளது.
OPINION - காத்திருந்து மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்கலாமா? நீங்கள் ஒரு பழைய பிளிப் போனில் இருந்து அப்கிரேட் ஆகிறீர்கள் என்றால், மோட்டோரோலா ரேசர் 70 அல்ட்ரா கொண்டுவரும் சிறிய மேம்பாடுகள் அன்றாட பயன்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் நீங்கள் ஏற்கனவே ரேஸர் 60 அல்ட்ராவை பயன்படுத்துகிறீர்கள் என்றால், மோட்டோரோலா நிறுவனம் பேட்டரி அல்லது கேமரா செயல்திறனில் முன்னேற்றங்களைக் கொண்டுவராத வரையில், அதன் ரேஸர் 70 அல்ட்ரா - பெஸ்ட் ஆப்ஷனாக இருக்காது!
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் ரேஸர் 70 சீரிஸ் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும் என்றும், அதை தொடர்ந்து பரவலாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2025-ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.99,999 முதல் தொடங்குகிறது. மெமரி பற்றாக்குறையால் ஏற்படும் உலகளாவிய விலை உயர்வு போக்கைக் கருத்தில் கொண்டால், வரப்போகும் மாடலின் விலைகள் சற்று உயரக்கூடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications








