Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 50MP கேமரா.. 68W சார்ஜிங்.. வருகிறது புதிய Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா (Motorola Razr 70 Ultra) போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

குறிப்பாக இந்த போனில் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதி உள்ளது. மேலும் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா. அதுவும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது புதிய Motorola 5ஜி போன்..

மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 70 Ultra specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் ( Qualcomm Snapdragon 8 series chip) சிப்செட் வசதி மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி மெயின் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 1080 x 2640 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4-இன்ச் கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இந்த சிறிய டிஸ்பிளே ஆனது 1056 x 1066 பிக்சல்ஸ்,
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் எடை 188 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனின் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது புதிய Motorola 5ஜி போன்..

4700mAh பேட்டரி வசதி உடன் மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனம் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் மே மாதம் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது.

Photo Credit: Android Headlines/ @OnLeaks

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 70 Ultra images, specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X