Home
Mobile

Motorola சும்மா மிரட்டுதே.. Moto G17, Moto G67 உட்பட ஒரே நேரத்தில் மொத்தம் 5 புதிய போன்கள்!

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அதன் அடுத்த போல்டபிள் ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து மேலும் பல மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. போல்டபிள் மாடல் ஆனது கடந்த ஆண்டு மீடியாடெக் டைமன்சிட்டி 7400எக்ஸ் சிப்செட் உடன் அறிமுகமான மோட்டோரோலா ரேசர் 60 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன - மோட்டோரோலா ரேசர் 70 (Motorola Razr 70) ஸ்மார்ட்போன் ஆகும்.

ரேசர் 70 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை மோட்டோரோலா நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமா உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மோட்டோரோலா ரேசர் 70 ஸ்மார்ட்போன் ஆனது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒழுங்குமுறை ஒப்புதலை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் விரைவில் வெளியிடப்படும் என்பதை குறிக்கிறது.

Moto G17, Moto G67 உட்பட ஒரே நேரத்தில் மொத்தம் 5 புதிய போன்கள்!

மேலும் டெக் பிளாக்கர் ஆன அன்வின் (Anvin - @ZionsAnvin) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, மோட்டோரோலா ரேசர் 70 அல்ட்ரா, எட்ஜ் 70 ஃப்யூஷன், மோட்டோ ஜி 17 மற்றும் மோட்டோ ஜி 67 உள்ளிட்ட பல்வேறு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் சான்றிதழ் தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளது. ஆக இவைகள் எல்லாமே தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் லீக் ஆகவில்லை.

நினைவூட்டும் வண்ணம் மோட்டோரோலா ரேஸ்ர் 60 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் கடந்த மே 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இதன் ஆரம்ப விலை ரூ.49,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இது பான்டோன் ஜிப்ரால்டர் சீ, பான்டோன் லைட்டஸ்ட் ஸ்கை மற்றும் பான்டோன் ஸ்பிரிங் பட் ஆகிய கலர்களில் வந்தது.

முன்னதாக மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி77 5ஜி (Moto G77 5G) மற்றும் மோட்டோ ஜி67 5ஜி (Moto G67 5G) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. மோட்டோ ஜி77 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.31,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோ ஜி67 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்விரு 5ஜி ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அறிவிக்கப்படலாம்; அறிவிக்கப்பட்டால் அதை உடனே அப்டேட் செய்கிறோம்.

மோட்டோ ஜி77 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Moto G77 5G Specifications):
- 1272 x 2772 பிக்சல் ரெசல்யூஷன்
- 460 பிபிஐ
- 6.78-இன்ச் எக்ஸ்ட்ரீம் AMOLED 1.5K டிஸ்பிளே
- பஞ்ச்-ஹோல் கட்அவுட்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 10-பிட் கலர்ஸ்
- கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு
- MediaTek Dimensity 6400 சிப்செட்
- Android 16 ஓஎஸ்
- 8GB RAM மற்றும் 128GB ஸ்டரோஜ்
- 2TB வரை விரிவாக்கக்கூடியது.

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.7 அபெர்க்ஷர் உடன் 108MP ப்ரைமரி கேமரா
- மேக்ரோ விஷன் ஆதரவுடன் 8MP f/2.2 அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார்
- பேக் பேனலில் ஒரு அம்பியண்ட் லைட் சென்சாரும் உள்ளது
- முன்பக்கத்தில் எப்/2.5 அபெர்க்ஷர் உடன் 32MP செல்பீ கேமரா

- 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5200mAh பேட்டரி
- 5G SA/ NSA, Dual 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.4, GPS/GLONASS/QZSS/Galileo, NFC
- சார்ஜ் செய்வதற்கான USB Type-C போர்ட்
- டால்பி அட்மாஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஐபி64 ரேட்டிங்
- MIL-STD 810H சான்றிதழால் ஆதரிக்கப்படும் இராணுவ தர நீடித்துழைப்பு

மோட்டோ ஜி67 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Moto G67 5G Specifications):
- 6.78-இன்ச் எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 18MP அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 32MP செல்பீ கேமரா
- 5200mAh பேட்டரி
- 30W ஃபாஸ்ட் சார்ஜிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 70 Razr 70 Ultra Edge 70 Fusion Moto G17 Moto G67 Tipped to Launch Soon Globally
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X