Home
Mobile

பிளிப்கார்ட் காலி.. DUAL டிஸ்பிளே.. 50MP மெயின்.. 32MP செல்பீ.. IP48 ரேட்டிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா ரேசர் 60 (Motorola Razr 60) போனின் விற்பனை பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) தொடங்கி இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஃபிளிப் போன் தேடிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பக்காவான பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த மோட்டோரோலா போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா ரேசர் 60 இந்திய விற்பனை (Motorola Razr 60 India Sale): இந்த மோட்டோரோலா ஃபிளிப் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆக இருக்கிறது. இதே விலைக்கு பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் காலி.. DUAL டிஸ்பிளே.. 50MP மெயின்.. 32MP செல்பீ மாடல்!

பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால், ரூ.2,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். ரூ.48,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இந்த ரேசர் 60 போனில் பான்டோன் ஜிப்ரால்டர் சீ (PANTONE Gibraltar Sea), பான்டோன் லைட்டஸ்ட் ஸ்கை (PANTONE Lightest Sky), பான்டோன் ஸ்பிரிங் பட் (PANTONE Spring Bud) கலர்கள் இருக்கிறது.

மோட்டோரோலா ரேசர் 60 அம்சங்கள் (Motorola Razr 60 Specifications): இந்த போனில் 6.96 இன்ச் (1080 x 2640 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) கிடைக்கிறது. இந்த மெயின் டிஸ்பிளேவுக்கு புரொடெக்சன் கிடையாது. இருப்பினும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது.

மேலும், 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 220Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் எச்பிஎம் மோட் உள்ளது. ஆனால், 3.63 இன்ச் (1056 x 1066 பிக்சல்கள்) பிஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கிடைக்கிறது. இதில் எச்டிஆர்10 (HDR10), 1700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் வருகிறது. இந்த அவுட்டர் டிஸ்பிளேவிலேயே 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா-வைடு வருகிறது. அல்ட்ரா வைடில் மேக்ரோ சப்போர்ட் உள்ளது. குவாட் பிக்சல், பிக்சல் போகஸ், 4K வீடியோ ரெக்கார்டிங், ஓஐஎஸ் டெக்னாலஜி வருகிறது.

மேக்ரோ விஷன் மட்டுமல்லாமல், ஆட்டோ நைட் விஷன், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், டூயல் கேப்ச்சர், கெஸ்ச்சர் செல்பீ, பேஸ் ரீடச் போன்ற கேமரா போட்டோகிராபி பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஆட்டோ என்ஹான்ஸ், எச்டிஆர் எஃபெக்ட், மேஜிக் எரைசர், மேஜிக் எடிட்டர், ரீஇமேஜின் போன்ற கூகுள் போட்டோ பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்த மோட்டோரோலா ரேசர் 60 போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங், குவாட் பிக்சல் சப்போர்ட் கிடைக்கிறது. பர்ஃபாமென்ஸ் பக்கம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை, மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் டைமன்சிட்டி 7400எக்ஸ் (Octa Core 4nm MediaTek Dimensity 7400X) சிப்செட் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் அதுபோக 3 ஜெனரேஷன் ஓஸ் அப்டேட் கிடைக்கிறது. இந்த மோட்டோ போனில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி கிடைக்கிறது. இதுபோக 15W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது. ஆகவே, வெறும் 7.25 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 188 கிராம் எடை மற்றும் IP48 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 60 With 8GB RAM Sale Under Rs 50000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X