மே.28 குறிச்சாச்சு.. pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4500mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. புது மோட்டோரோலா மாடல்!
இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா ரேசர் அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) மாடலை தொடர்ந்து, அடுத்த ஃபிளிப் மாடலான மோட்டோரோலா ரேசர் 60 (Motorola Razr 60) போனின் வெளியீட்டுக்கு அந்த நிறுவனம் ரெடியாகிவிட்டது. ஒட்டுமொத்த பீச்சர்களுடன் வெளியீட்டு தேதியை இப்போது உறுதி செய்துள்ளது. அதேபோல விற்பனை விவரங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த மோட்டோரோலா ரேசர் 60 போனின் பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மே 28ஆம் தேதி மோட்டோரோலா ரேசர் 60 போனின் வெளியீடு நடக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டும் வெளியாக இருக்கிறது. பான்டோன் ஜிப்ரால்டர் சீ (PANTONE Gibraltar Sea), பான்டோன் ஸ்பிரிங் பட் (PANTONE Spring Bud) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

அதேபோல பான்டோன் லைட்டஸ்ட் ஸ்கை (PANTONE Lightest Sky) கலரும் வருகிறது. அலுமினியம் ஃபிரேம் டிசைனில் லெதர் மற்றும் நைலான் பேக் பேனல் பினிஷிங் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன், IP48 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா ரேசர் 60 அம்சங்கள் (Motorola Razr 60 Specifications): இந்த மோட்டோவில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கின்றன. மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700எக்ஸ் (4nm Octa Core MediaTek Dimensity 7400X) வருகிறது.
6.96 இன்ச் (1080 x 2640 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz கேம் மோட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த மோட்டோரோலா ரேசர் 60 போனின் அவுட்டர் டிஸ்பிளேவை பார்க்கையில், 3.63 இன்ச் (1056 x 1066 பிக்சல்கள்) பிஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10, 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு மட்டுமே முன்பு பார்த்த புரொடெக்சன் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு/மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி கிடைக்கிறது. பிக்சல் போகஸ், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா ரேசர் 60 போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் + 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.
டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்பாஷியல் சவுண்ட் (Spatial Sound) வருகிறது. ஆடியோ ஜாக் கிடைக்கவில்லை. ஆகவே, டைப்-சி போர்ட்டில் ஆடியோ அவுட் எடுக்கலாம். அதேபோல சார்ஜிங் செய்து கொள்ளலாம். 30W டர்போ பவர் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த மோட்டோரோலா ரேசர் 60 மாடலின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மிட்-பிரீமியம் செக்மெண்ட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா போனின் ஆரம்ப விலை ரூ.89,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இதுவும் மிட்-காஸ்ட்லி மாடலாக வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








