Home
Mobile

மிட்-ரேஞ்ச் அதிருது.. ஃபிளிப்ல pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4500mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனையும் கொண்ட ஃபிளிப் போன் மாடலை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், புதிதாக வெளியாகி இருக்கும் மோட்டோ ஏஐ பீச்சர்களுடன் கூடிய மோட்டோரோலா ரேசர் 60 (Motorola Razr 60) போனை ஆர்டர் செய்யலாம். டூயல் பிஓஎல்இடி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன், ஓஐஎஸ் டெக்னாலஜி கேமரா, 4500mAh பேட்டரி, 30W சார்ஜிங் போன்ற பீச்சர்களில் பின்னியெடுக்கிறது. இந்த ஃபிளிப் போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

சாம்சங் நிறுவனத்தின் ஃபிளிப் மாடல்களை ஒப்பிடுகையில் மோட்டோரோலாவின் ரேசர் மாடல்கள் கம்மியான பட்ஜெட்டில் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் பீச்சர்கள் மற்றும் பில்ட் குவாலிட்டியிலும் மிரளவிடுகின்றன. மே 13ஆம் தேதி இந்திய மார்கெட்டில் ரூ.89,999 பட்ஜெட்டில் மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) வெளியானது.

மிட்-ரேஞ்ச் அதிருது.. ஃபிளிப்ல pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. மாடல்?

ஆனால், பட்ஜெட் பிரீமியமாக இருப்பதால் அடுத்து வரும் மாடல் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை மோட்டோரோலோ நிறுவனம் பொய்யாக்கவில்லை. எதிர்பார்த்ததை போலவே மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் மோட்டோரோலா ரேசர் 60 போனை களமிறக்கி இருக்கிறது. முதலில் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா ரேசர் 60 அம்சங்கள் (Motorola Razr 60 Specifications): இந்த மோட்டோரோலோவில் 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400X 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400X 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

மோட்டோ ஏஐ (Moto AI) பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த ஃபிளிப் போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட ஒரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரேம் பூஸ்ட் (RAM Boost) சப்போர்ட் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.96 இன்ச் (1080 x 2640 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது.

இதில் 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 220Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட 3.63 இன்ச் (1056 x 1066 பிக்சல்கள்) பிஓஎல்இடி செகண்டரி டிஸ்பிளே கிடைக்கிறது.

Take a Poll

இதிலும் 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா ரேசர் 60 போனில் வழக்கமான டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா-வைடு + மேக்ரோ கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS), 4K ஷூட் மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

4500mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP48 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர், சைடு ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது. 8 ஜிபி ரேம் + 25 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,999 ஆக இருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 60 With 50MP Camera Launched India Sale From June 4 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X