முரட்டு மோட்டோ.. pOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 4700mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோ பிரியர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஃபிளிப் மாடலான மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பிஓஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், மோட்டோ ஏஐ, 16 ஜிபி ரேம், 4700mAh பேட்டரி, 68W சார்ஜிங் கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட இந்த மோட்டோரோலா போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 60 Ultra Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், அதற்கு 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கிடைக்கிறது. மார்கெட்டில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாடல்களில் கிடைக்கும் சிப்செட் மற்றும் ஜிபியு இதில் வருகிறது.

ஆகவே, இந்த மோட்டோவில் ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரேவொரு வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. டூயல் பிஓஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்து கொடுக்கிறது.
ஆகவே, 6.96 இன்ச் (1224 x 2992 பிக்சல்கள்) மெயின் டிஸ்பிளேவில் பிஓஎல்இடி (pOLED) பேனல், 1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இது மல்டி மீடியாவுக்கு மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கும் பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்கும். அதேபோல டால்பி விஷன் (Dolby Vision), 4000 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது.
4 இன்ச் (1272 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே கிடைக்கிறது. இது வெளியே இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் (Corning Gorilla Glass Ceramic) புரொடெக்சனை கொடுக்கிறது. மெயின் டிஸ்பிளேவை போலவே 165Hz ரெஃப்ரெஷ் ரேட்டை கொடுக்கிறது. ஆனால், இதில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது.

ரியர் கேமரா டிசைனில் மாற்றமில்லை. டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே, இந்த மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது.
இந்த கேமராவில் மோட்டோ ஏஐ (Moto AI) பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா போனில் பேட்டரி சிஸ்டம் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ஏனென்றால், 4700mAh பேட்டரி மட்டுமல்லாமல், அந்த பேட்டரிக்கு 68W டர்போ சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) கிடைக்கிறது. IP48 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 99,999ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.10,000 டிஸ்கவுண்ட் போக ரூ.89,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் மே 21ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பான்டோன் ஸ்கேராப் (PANTONE Scarab), ரியோ ரெட் (Rio Red), மவுண்டெய்ன் டிராய்ல் (Mountain Trail) கலர்களில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








