Home
Mobile

4-இன்ச் டிஸ்பிளே, 12GB ரேம், Snapdragon 8 Elite சிப் உடன் வரும் புதிய Motorola போன்.. எந்த மாடல்? என்ன விலை?

மோட்டோரோலா நிறுவனம் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் - பிளாக்ஷிப் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ஆயத்தமாக உள்ளது போல் தெரிகிறது. அது மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, இந்த ஸ்மார்ட்போனின் டிசைன், டிஸ்பிளே, சிப்செட், ரேம், ஓஎஸ் மற்றும் கலர் ஆப்ஷன் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஹெட்லைனின் சமீபத்திய அறிக்கையானது, மோட்டோரோலா ரேஸ்ர் 60 அல்ட்ராவின் சிங்கிள் டார்க் க்ரீன் கலர் ஆப்ஷனை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் நிச்சயமாக இது பல வகையான கலர்களில் அறிமுகமாகும் என்பதில் சந்தேங்கமே வேண்டாம். ஏனென்றால் மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவானது ஹாட் பிங்க், மிட்நைட் ப்ளூ, மோச்சா மவுஸ், பீச் ஃபஸ் மற்றும் ஸ்பிரிங் கிரீன் என பல கலர்களில் அறிமுகமானது.

4-இன்ச் டிஸ்பிளே உடன் வரும் புதிய Motorola போன்!

ஆக மீதமுள்ள கலர் ஆப்ஷன்கள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் போது அல்லது அதிகாரப்பூர்வ டீசர்களின் வழியாக வெளிப்படுத்தப்படலாம். வடிவமைப்பை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸ்ர் 60 அல்ட்ரா வானது அதன் முன்னோடிகளை போலவே, ஃபாக்ஸ் லெதர் ரியர் பேனலை கொண்டிருக்கும். அதாவது பெரும்பாலும் இது ரேஸர் 50 மாடலை போலவே இருக்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது ஒரு பெரிய 4-இன்ச் கவர் டிஸ்பிளேவுடன் வரலாம். இதில் நீங்கள் வீடியோக்களை பார்க்கலாம், கேம்களை விளையாடலாம், அறிவிப்புகளை சரிபார்க்கலாம், கூகுள் ஜெமினையை பயன்படுத்தலாம் மற்றும் ஃபுல்-ஸ்க்ரீன் கீபோர்ட்டில் டைப் செய்யலாம்.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, போல்டபிள் அனுபவத்தை மேம்படுத்த சில ஸ்மார்ட் ட்வீக்குகளுடன், ஸ்டாக் ஆண்ட்ராய்டுக்கு நெருக்கமாக இருக்கும் சாஃப்ட்வேர் உடன் இது அனுப்ப்படலாம். மேலும், விரைவான அணுகலுக்காக உங்களுக்கு பிடித்த ஆப்களை கவர் டிஸ்பிளேவில் பின் செய்யும் அம்சமும் இதில் சேர்க்கப்படலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை 60 ரேஸர் அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் தீவிர சக்தியை கொண்ட லேட்டஸ்ட் சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய கீக்பெஞ்ச் லிஸ்டிங்கின்படி, இது முதன்மை நிலை ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சிப்செட் 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம். இந்த புதிய சிப்செட் ரேஸர் 50 அல்ட்ராவில் காணப்படும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்டை விட அதிக சக்தி வாய்ந்தது.

விலையை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.99,999 க்கு அறிமுகமானது. தற்போது ரூ.20,000 விலை குறைக்கப்பட்டு ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக ரேஸர் 60 அல்ட்ராவின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்று இப்போதைக்கு கூற முடியாது. பெரும்பாலும் இதுவும் ரூ.1 லட்சம் என்கிற பட்ஜெட்டின் கீழ் தான் அறிமுகமாகும்.

மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 413பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட4-இன்ச் எல்டிபிஓ பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது!

சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டில் இயங்குகிறது, இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் அவுட்டர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இருப்பினும் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் 68W சார்ஜரை அனுப்புகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 60 Ultra Will get Big 4 inch Cover Display Snapdragon 8 Elite chipset Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X