அடுத்த வாரம் உறுதி.. 50எம்பி கேமரா, 68W சார்ஜிங், 7 இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புதிய Motorola போன்! எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) போனை அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 60 Ultra specifications): 7-இன்ச் சூப்பர் எச்டி எல்டிபிஒ அமோலெட் டிஸ்பிளே ( Super HD LTPO AMOLED display)உடன் இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், 4500 நிட் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 4-இன்ச் கவர் டிஸ்பிளே (cover display) வசதியும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த சிறிய டிஸ்பிளே எச்டிஆர் 10 பிளஸ், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 165ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் எலைட் (Snapdragon 8 Gen Elite) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் ஆதரவும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலி போட்டோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவில எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை (Android 15 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போனில் 4700mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டூயல் சிம் 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் வி5.4, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த போன் வெளிவரும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி மெமரி ஆதரவும் இந்த போனில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications