மே 13 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய மோட்டோரோலா போன் வரும் மே 13-ம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 60 Ultra specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் எலைட் (Snapdragon 8 Gen Elite) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் 7-இன்ச் சூப்பர் எச்டி எல்டிபிஒ அமோலெட் டிஸ்பிளே ( Super HD LTPO AMOLED display)உடன் இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், 4500 நிட் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இதுதவிர 4-இன்ச் கவர் டிஸ்பிளே (cover display) வசதியும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த சிறிய டிஸ்பிளே எச்டிஆர் 10 பிளஸ், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 165ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலி போட்டோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை (Android 15 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போனில் 4700mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), IP48 வாட்டர் ரெசிஸ்டன்ட், டூயல் சிம் 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் வி5.4, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 16ஜிபி ரேம், 512ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








