உண்மையாவே இதுதான் Moto-வின் முரட்டு போன்.. 7-இன்ச் டிஸ்பிளே, Snapdragon 8 Elite சிப், 16GB ரேம், 68W சார்ஜிங்!
மோட்டோரோலா நிறுவனம் வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி ஒரு பெரிய உலகளாவிய வெளியீட்டு நிகழ்விற்கு தயாராகி வருகிறது. அந்நிகழ்வில் எட்ஜ் 60 மற்றும் எட்ஜ் 60 ப்ரோ உட்பட பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான இவான் பிளாஸ் வழியாக எட்ஜ் 60 மாடலின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ப்ரோமோஷனல் மெடீரியல்களை லீக் செய்திருந்தார். இப்போது அவர் ரேசர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) போல்டபிள் ஸ்மார்ட்போனை பற்றிய விவரங்களையும் வெளியிட்டு உள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ரேசர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மெயின் டிஸ்பிளே 7-இன்ச் அளவுடையதாக இருக்கும். மேலும் அது 1440பி ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர், HDR10+, டால்பி விஷன், 120% DCI-P3 கவரேஜ் மற்றும் 4,500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடன் கூடிய LTPO AMOLED பேனலை பேக் செய்யும்
கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை HDR10+, 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர், 100% DCI-P3 மற்றும் 3,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 4-இன்ச் LTPO AMOLED பேனலை கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்பை பயன்படுத்தும் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் இருக்கும். கேமராகைகளை பொறுத்தவரை இது OIS மற்றும் f/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் மேக்ரோ ஆதரவுடன் 50எம்பி அல்ட்ரா-வைட் கேமராவை கொண்டிருக்கு. முன்பக்கத்தில் பழைய 32எம்பி சென்சாரில் இருந்து 50எம்பி சென்சார் ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4,700mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது ரேசர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 4,000mAh பேட்டரி, 44W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றிலிருந்து ஒரு மிகப்பெரிய 'ஜம்ப்' ஆகும். எடையில் இந்த ஸ்மார்ட்போன் 199 கிராம் ஆக இருக்கும்
ஆண்ட்ராய்டு 15 ஐ அவுட் ஆஃப் பாக்ஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம், 5ஜி, 4ஜி LTE, வைஃபை 5G/6/6E/7, ப்ளூடூத் 5.4, என்எப், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி-சி போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் ரெட், க்ரீன், வுட், பிளாக் மற்றும் பிங்க் ஆகிய கலர்களில் வெளியிடப்படலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.1,31,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 413பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட4-இன்ச் எல்டிபிஓ பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது!
சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டில் இயங்குகிறது, இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் அவுட்டர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இருப்பினும் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் 68W சார்ஜரை அனுப்புகிறது. Photo Courtesy: Gizmo China | Evan Blass


Click it and Unblock the Notifications








