செப்.11-க்கு குறிச்சாச்சு.. அப்புறம் இதுதான்.. pOLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி.. கிரிஸ்டல்ஸ் லுக்.. மாடல்?
இந்திய மார்கெட்டில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற மோட்டோரோலா ரேஸர் 60 (motorola razr 60) ஸ்மார்ட்போனின் புதிய ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் (Swarovski Crystals) எடிஷன் களமிறங்கி இருக்கிறது. ஜூவல்லரி டிசைன் எலிமெண்ட்களுடன் அல்ட்ரா லக்ஸரி லுக் கொடுக்கிறது. இந்த ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் எடிஷனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா ரேஸர் 60 ஸ்மார்ட்போனில் கிடைத்த அதே பீச்சர்களே இதிலும் கிடைக்கின்றன. ஆகவே, டிசைனில் மட்டும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. 3டி குயில்டெட் பேட்டர்ன் (3D Quilted Pattern) டிசைன் கொண்ட பேக் பேனலில் 35 ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல 26-பேசெட் கிஸ்டல் ஹின்ஞ்சில் வருகிறது.

ஏற்கனவே, இருந்த பான்டோன் ஜிப்ரால்டர் சீ (PANTONE Gibraltar Sea), பான்டோன் லைட்டஸ்ட் ஸ்கை (PANTONE Lightest Sky), பான்டோன் ஸ்பிரிங் பட் (PANTONE Spring Bud) கலர்கள் போக இந்த ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் எடிஷனின் பான்டோன் ஐஸ் மெல்ட் (PANTONE Ice Melt) கலரும் சேர்ந்துள்ளது. அதேபோல மோட்டோ பட்ஸ் லூப் (moto buds loop) மாடலிலும் புது எடிஷன் வந்துள்ளது.
இதில் சில்வர் மற்றும் கோல்டு ஆகிய கலர்களில் ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இவற்றின் விலை விவரங்களை பார்ப்பதற்கு முன்பாக பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா ரேஸர் 60 அம்சங்கள் (motorola razr 60 Specifications): இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் 4என்எம் டைமன்சிட்டி 7400எக்ஸ் (Octa Core 4nm MediaTek Dimensity 7400X) சிப்செட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. மேலும், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.96 இன்ச் (1080 x 2640 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 2000 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 220Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சனுடன் 3.63 இன்ச் (1056 x 1066 பிக்சல்கள்) பிஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமே கிடைக்கிறது. அதேபோல 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.
இதிலும், எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் கிடைக்கிறது. காம்பாக்ட் டிசைனில் இருப்பதால், 30W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் டூயல் ரியர் செட்டப் கொடுக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.
மோட்டோரோலா ரேஸர் 60 விலை (motorola razr 60 Price): இந்த ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் எடிஷனின் கீழ் கிடைக்கும் பான்டோன் ஐஸ் மெல்ட் கலர் வேரியண்ட்டின் விலை ரூ.54,999 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. மோட்டோ பட்ஸ் லூப் (ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் எடிஷன்) விலை ரூ.24,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications