Home
Mobile

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா ரேசர் 5 ஜி- விலை மற்றும் அம்சங்கள்!

மோட்டோரோலா ரேசர் 5 ஜி சில வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தியது.

மோட்டோரோலா ரேசர் 5ஜி

மோட்டோரோலா ரேசர் 5ஜி

மோட்டோரோலா ரேசர் 5ஜி இணைப்பு விருப்பத்துடன் வருகிறது. இந்தியாவில் மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி அறிமுகம் குறித்து நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்த மோட்டோரோலா ட்வீட்டில் ஒரு குறுகிய வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ளது. நிறுவனம் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை பண்டிகை காலங்களில் இந்தியாவுக்கு கொண்டு வரும் என குறிப்பிட்டுள்ளது. மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வாரிசான 5 ஜி அம்சத்தோடு மோட்டோரோலா ரேஸ்ர் அறிமுகப்படுத்தியது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனானது 6.2 அங்குல பிளாஸ்டிக் எல்இடி பிரதான டிஸ்ப்ளே மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வருகிறது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி ஒரே ரேம் + சேமிப்பு மாறுபாட்டோடும் மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. ஸ்மார்ட்போன் 2,800 எம்ஏஎச் பேட்டரியுடனும், வேகமான சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

8 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு

8 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு

மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி 8 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு மாறுபாட்டோடு அமெரிக்காவில் 1,399.99 டாலர் அதாவது சுமார் 1.02 லட்சம் ரூபாய் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி: அம்சங்கள்

இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதுமட்டுமின்றி ப்ளஷ் கோல்ட், பாலிஷ் செய்யப்பட்ட கிராஃபைட் மற்றும் திரவ மெர்குரி ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இரட்டை சிம் (நானோ + இசிம்) மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.2 அங்குல பிளாஸ்டிக் எல்இடி பிரதான திரை 2,142x876 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 21: 9 விகித அளவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புதுப்பிக்கப்பட்ட கீல் வடிவமைப்பு அம்சம் உள்ளது. இது பூஜ்ஜிய இடைவெளி மூடுதல் அளவை வழங்குகிறது.

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி ஸ்மார்ட்போனில் 2.7 அங்குல எல்இடி இரண்டாம் நிலை டிஸ்ப்ளே 600x800 பிக்சல் திரை தெளிவுத்திறன் மற்றும் 4: 3 விகித அளவையும் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி 8 ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 620 ஜி.பீ.யுடன் ஜோடியாக இருக்கும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி 256 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது, இதில் கூடுதல் மெமரி நீட்டிப்பு வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் விரிவாக்க வசதி இல்லை.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா எஃப் / 1.7 துளை மூலம் வருகிறது. சென்சார் குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் (OIS) ஐ ஆதரிக்கிறது மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் தொழில்நுட்ப அம்சத்தையும் வழங்குகிறது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் இயக்கப்படும் போதே செல்ஃபி கேமராவை இயக்கலாம்.

20 மெகாபிக்சல் செல்பி கேமரா

20 மெகாபிக்சல் செல்பி கேமரா மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி கேமரா செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20 மெகாபிக்சல் கேமரா எஃப் / 2.2 துளை கொண்டுள்ளது. இது முதன்மை மடிப்புத் திரைக்கு மேலே உச்சியில் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி 2,800 எம்ஏஎச் பேட்டரியுடன் 15W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த தொலைபேசி ஒரே சார்ஜிங்கில் 24 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் அம்சம் உள்ளது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 5 ஜி மற்றும் 4 ஜி ஆதரவு, வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி, என்எப்சி, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், ப்ளூடூத் 5.0 மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். 192 கிராம் எடையுள்ள, மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி திறக்கும்போது 169.2x72.6x7.9 மிமீ மற்றும் மடித்தால் 91.7x72.6x16 மிமீ அளவும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Razr 5G Smartphone Launching Soon in India: Here the Price and Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X