வேற போன்லாம் அப்புறம்.. இது வரட்டும் பாஸ்.. pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4200mAh பேட்டரி.. எந்த மாடல்?
மோட்டோ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஃபிளிப் போன் பிரியர்களையும் அறக்க பறக்க விடும்படியான பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் மோட்டோரோலா ரேசர் 50 (Motorola Razr 50) போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. டூயல் பிஓஎல்இடி டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 4200mAh பேட்டரி, ஃபாஸ்ட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களில் மிரளவிடும் இந்த மோட்டோரோலா ரேசர் 50 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மோட்டோ ஜி45 5ஜி போனை பட்ஜெட்டில் களமிறக்க இருக்கும் மோட்டோரோலா நிறுவனம், சூட்டோடு சூடாக ஃபிளிப் போன் பிரியர்களை தட்டித்தூக்கும்படி மோட்டோரோலா ரேசர் 50 போனின் அறிமுகம் குறித்த டீசரையும் வெளியிட்டுள்ளது. ரேசர் 50 அல்ட்ரா மாடலைவிட மலிவான விலைக்கு இந்த போன் வெளியாக இருக்கிறது.

இருப்பினும், பிரீமியம் பீச்சர்களை பேக் செய்வதால், மிகப்பெரும் வரவேற்பு பெற காத்திருக்கிறது. ஏனென்றால், குளோபல் மார்கெட்டில் இந்த போனின் பீச்சர்கள் வெளியாகி மார்கெட்டை அதிரவிட்டது. இதனால், இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பல மாதங்களாக இருக்கிறது. இப்போது, அந்த நேரம் வந்துவிட்டது. முதலில் பீச்சர்களை பார்ப்போம்.
மோட்டோரோலா ரேசர் 50 அம்சங்கள் (Motorola Razr 50 Specifications): இந்த ரேசர் மாடலானது, அல்ட்ரா பிரீமியம் டிசைனில் கோலா கிரே (Koala Grey), பீச் சாண்ட் (Beach Sand) மற்றும் ஸ்பிரிட்ஸ் ஆரஞ்ச் (Spritz Orange) ஆகிய 3 கலர்களை கொண்டுள்ளது. மெயின் மற்றும் செகண்டரி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. ஆகவே, 6.9 இன்ச் பிஓஎல்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே உள்ளது.
இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 300Hz கேமிங் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் உள்ளது. 3.63 இன்ச் பிஓஎல்இடி செகண்டரி டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த மோட்டோரோலா ரேசர் 50 போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) வருகிறது. சைடு பிங்கர்பிரிண்ட் ரீடர் (Side Fingerprint Reader) உள்ளது.
இந்த மோட்டோவில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் (MediaTek Dimensity 7300X) சிப்செட் உள்ளது. 30W டர்போபவர் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4200mAh பேட்டரி வருகிறது. 188 கிராம் எடை வருகிறது. வெறும் 7.25 எம்எம் தடிமன் கொண்டிருக்கிறது. IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 50 எம்பி மெயின் + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் குவாட் பிக்சல் (Quad Pixel) டெக்னாலஜி வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. மேலும், மேக்ரோ ஆப்ஷன், பிக்சல் போகஸ் போன்ற பீச்சர்கள் உள்ளன. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவிலும் குவாட் பிக்சல் டெக்னாலஜி வருகிறது. ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், கெஸ்ச்சர் கேப்ச்சர் போன்ற ஏஐ பீச்சர்கள் வருகின்றன.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) வருகின்றன. இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ராவின் விலை ரூ.99,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆனால், இந்த மோட்டோரோலா ரேசர் 50 மாடலானது, ரூ.70,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








