Home
Mobile

வேற ரக மோட்டோ.. டூயல் pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP டெலிபோட்டோ.. OIS கேமரா.. 4000mAh பேட்டரி.. எந்த போன்?

டூயல் பிஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 50 எம்பி டெலிபோட்டோ கேமரா, 44W சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 4000mAh பேட்டரி, மோட்டோ ஏஐ போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரூ.9999 மதிப்புள்ள மோட்டோ பட்ஸ் பிளஸ், ரூ.5000 பேங்க் டிஸ்கவுண்ட், 3 மாதங்களுக்கான ஜெமினி அட்வான்ஸ்டு சந்தா உடன் மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) போன் வெளியாகி இருக்கிறது. இந்த ஃபிளிப் போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 50 Ultra Specifications): இந்த மோட்டோவின் மெயின் டிஸ்பிளேவில் 6.9 இன்ச் (2640 × 1080 பிக்சல்கள்) ஃபிலெக்ஸ்வியூ (FlexView) பிஓஎல்இடி (pOLED) பேனல் வருகிறது. இதுவொரு எல்டிபிஓ (LTPO) மாடலாகும். ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

வேற ரக மோட்டோ.. டூயல் pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP டெலிபோட்டோ!

எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. செகண்டரி டிஸ்பிளேவில் 4 இன்ச் (1272 × 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி பேனல் வருகிறது. இதுவொரு குயிக்வியூ (QuickView) டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, மெயின் டிஸ்பிளேவின் பெரும்பால அவுட்புட் இதிலும் கிடைக்கும்.

இந்த டிஸ்பிளேவிலும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த டிஸ்பிளே வெளியே வருவதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் வருகிறது. ஆகவே, ஃபிளிப் போன்களில் 2 டிஸ்பிளேக்களிலும் பக்கா அவுட்புட் கொடுக்கும் மாடலாக இந்த மோட்டோரோலோ ரேசர் 50 அல்ட்ரா போன் இருக்கிறது.

இந்த போனில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் மிட்-பிரீமியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

வேற ரக மோட்டோ.. டூயல் pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP டெலிபோட்டோ!

செகண்டரி டிஸ்பிளேவிலேயே டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 50 டெலிபோட்டோ கேமரா வருகிறது. 2X ஜூமிங் சப்போர்ட் வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் உள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 44W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) வருகிறது. இந்த பேட்டரியுடன் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.09 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. 189 கிராம் எடை வருகிறது.

டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. டூயல் டிஸ்பிளே வருவதால், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த மோட்டோவின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.99,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் சலுகைகளுடன் ஜூலை 10ஆம் தேதி ப்ரீ-புக்கிங் தொடங்குகிறது. ப்ரீ-புக்கிங் செய்தால், ரூ.9999 மதிப்புள்ள மோட்டோ பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.5000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 50 Ultra With 12GB RAM Launched Sale From July 10 Via Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X