Home
Mobile

புதுசு வந்ததும் ரூ.31,450 டிஸ்கவுண்ட்.. திடீர் டிமாண்டில் Motorola Flip போன்.. என்ன மாடல்?

மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் பிளிப் போன் ஆக மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16GB RAM மற்றும் 512GB இன்டர்னல் மெமரி கொண்ட சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.99,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம். அமேசானில் வாங்கும் போது ரூ.10,000 வங்கி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இது 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது: Phantom Wood, Fandom Scarab மற்றும் Phantom Rio Red. இதற்கிடையில், புதிய மாடல் வந்ததும் மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா மீது பெரிய ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.31,450 டிஸ்கவுண்ட்.. திடீர் டிமாண்டில் Motorola Flip போன்!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது 12GB RAM மற்றும் 512GB இன்டர்னல் மெமரி கொண்ட மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் விலையான ரூ.99,999 க்கு பதிலாக ரூ.68,549 க்கு வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வழியாக இங்த ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வமுள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 413பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட4-இன்ச் எல்டிபிஓ பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது!

சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டில் இயங்குகிறது, இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் அவுட்டர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இருப்பினும் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் 68W சார்ஜரை அனுப்புகிறது.

மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 7-இன்ச் OLED மடிக்கக்கூடிய டிஸ்பிளே
- 4-இன்ச் pOLED கவர் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக்
- ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் கட்டமைக்கப்பட்ட ஒரு கீல் (இது 800,000 க்கும் மேற்பட்ட மடிப்புகளைத் தாங்கும் கடுமையான சோதனைக்கு உட்பட்டுள்ளது)

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- மோட்டோ ஏஐ அம்சங்கள்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமரா
- 50MP செல்பீ கேமரா
- 4500mAh பேட்டரி
- 68W வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 50 Ultra Now Available Under Rs 70000 After Razr 60 Ultra Launched in India For 99999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X