Motorola சரவெடி.. OLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய 5G போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா ரேசர் 50 (Motorola razr 50) எனும் போல்டபிள் ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். 50எம்பி கேமரா, 33W சார்ஜிங், 256ஜிபி மெமரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோரோலா
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோரோலா ரேசர் 50 போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா ரேசர் 50 அம்சங்கள் (Motorola Razr 50 Specifications): 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி எல்டிபிஒ (pOLED LTPO ) மெயின் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த மெயின் டிஸ்பிளே ஆனது 2640×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 3.6-இன்ச் பிஒஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். இந்த சிறிய டிஸ்பிளேவில் 1066 x 1056 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் சப்போர்ட் (100% DCI-P3 color gamut), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் 4என்எம் (MediaTek Dimensity 7300X 4nm) சிப்செட் ஆதரவு கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன். மேலும் மாலி ஜி615 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த புதிய ஸமார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போன்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய மோட்டோரோலா ரேசர் 50 போன். அதேபோல் IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன் மாடல்.

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். அதேபோல் 32எம்பி செல்பி கேமரா, 4200mAh பேட்டரி, 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் எனப் பல அசத்தலான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஸ்பிரிட்ஸ் ஆரஞ்சு (Spritz Orange), சாண்ட் பீச் (Sand Beach) மற்றும் கோலா கிரே (Koala Gray) நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட இந்த மோட்டோரோலா ரேசர் 50 போனின் விலை ரூ.64,999-ஆக உள்ளது. ஆனால் இந்த போனுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகள் மூலம் ரூ.49,999-விலையில் வாங்கலாம். செப்டம்பர் 20-ம் தேதி அமேசான், மோட்டோரோலா.இன் தளங்களில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications