செப்டம்பர் 9 உறுதி.. pOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ரேசர் 50 (Motorola razr 50) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும். இந்நிலையில் மோட்டோரோலா ரேசர் 50 போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு அதன் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா ரேசர் 50 (Motorola razr 50 Specifications) : 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் இந்த மோட்டோரோலா ரேசர் 50 போன் அறிமுகமாகும். மேலும் 3.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவும் கொண்டுள்ளது இந்த போன். 1700 நிட்ஸ் பீக் பிரைடன்ஸ் (1700 nits peak brightness) 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

50எம்பி பிரைமரி கேமரா+ 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் (MediaTek Dimensity 7300X chipset) சிப்செட் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.
ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த மோட்டோரோலா ரேசர் 50 போனுக்கு கிடைக்கும். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோரோலா ரேசர் 50 போனின் அவுட்டர் டிஸ்பிளே ஆனது Google இன் ஜெமினிஅணுகலைப் பெற்றுள்ளது. IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலோ போன். மேலும் டால்பி ஆடியோவுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

4200mAh பேட்டரியுடன் இந்த மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
குறிப்பாக ரூ.47.000 பட்ஜெட்டில் மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளது. இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications