Home
Mobile

எவ்வளவு க்யூட்டா இருக்குது பாருங்க..இந்தியாவுக்கு வரும் பிரமாண்ட Motorola போன்.!

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் மேலும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா (motorola razr 40 ultra) என்கிற போல்டபில் போனை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம்.

இந்த போன் சமீபத்தில் தான் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா என்கிற போல்டபில் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

.இந்தியாவுக்கு வரும் பிரமாண்ட Motorola போன்.!

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் ஆனது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் 3.6-இன்ச் வெளிப்புற டிஸ்பிளே வசதியும் உள்ளது. இதன் வெளிப்புற டிஸ்பிளே ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

மிகவும் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் உடன் அட்ரினோ 730ஜிபியு வசதியும் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். குறிப்பாக இதன் பிராஸசர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு Moto MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மூலம் இந்த போன் இயங்குகிறது.

.இந்தியாவுக்கு வரும் பிரமாண்ட Motorola போன்.!

புதிய மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

3800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 33 வாட்ஸ் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 5 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்குகிறது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன்.

12எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா போன். எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

.இந்தியாவுக்கு வரும் பிரமாண்ட Motorola போன்.!

இந்த போல்டபில் போன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. அதேபோல் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனின் விலை 5,699 CNY (இந்திய மதிப்பில் ரூ.66,100) என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் சற்று உயர்வான விலையில் தான் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
motorola razr 40 ultra to launch in india soon: teaser released! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X