மிரட்டிவிட்ட மோட்டோ.. 2 பக்கம் டிஸ்பிளே.. உலகின் ஸ்லிம் போன் வேற.. ஃபிளிப் மாடலுக்கே மாஸ்!
ஒரே பிளிப் போனில் 2 ஓஎல்இடி டிஸ்பிளே, ஜென் 1 சிப்செட், 12 ஜிபி ரேம், வயர்லெஸ் சார்ஜிங் என்று ஃபிளாக்ஷிப் அம்சங்கள் மட்டுமல்லாமல் உலகின் ஸ்லிம் போன் என்ற பெருமை உடன் மோட்டோரோலா ரேசர் (Motorola Razr) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இப்போது வரும் எந்தவொரு பிளிப் போன்களிலும், இல்லாத வகையில் மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் 40 (Motorola Razr 40) மற்றும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) மாடல்களில் பிரைமரி டிஸ்பிளே உடன் செகண்டரி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு வித்தியாசமான டிசைனை கொண்டுள்ளதால், அந்த மாடல்களுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சொல்லப்போனால், மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்த மாடல்கள் இன்று (ஜூலை 3) வெளியாகிவிட்டன. இந்த போன்களின் மற்ற அம்சங்களும் வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. இந்த நேரத்தில் அவற்றின் முழு அம்சங்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
மோட்டோரோலா ரேசர் 40 அம்சங்கள் (Motorola Razr 40 Specifications): இந்த மோட்டோரோலா போன் 6.9 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த போனின் செகண்டரி டிஸ்பிளே 1.5 இன்ச் அளவில் உள்ளது.
இந்த போன் ஆண்டிராய்டு 13 ஓஎஸ் உடன் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் கொண்டிருக்கிறது. அதோடு அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது.
இந்த மோட்டோரோலா ரேசர் 40 போன் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 8W வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கிறது. இந்த போனின் கேமராவை பொறுத்தவரையில், 64 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் செட்டப் உள்ளது.
32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மார்க்கெட்டில் செர்ரி பவுடர் (Cherry Powder), அஸூர் கிரே (Azure Gray) மற்றும் பிரைட் மூன் ஒயிட் (Bright Moon White) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.59,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ கார்டுகளுக்கு ரூ.5000 தள்ளுபடி கிடைக்கிறது.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 40 Ultra Specifications): இந்த அல்ட்ரா போன் 6.9 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இருக்கிறது. இந்த போனின் செகண்டரி 3.6 இன்ச் அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
இந்த போனில் ஆண்டிராய்டு 13 ஓஎஸ் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 3800mAh பேட்டரி கொண்டிருக்கிறது.
அதோடு 5W வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 12 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. ஃபெங்யா பிளாக் (Fengya Black), ஐஸ் கிரிஸ்டல் ப்ளூ (Ice Crystal Blue) மற்றும் மெஜந்தா ஸ்ஷேட்ஸ் ( Magenta shades) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது. இந்த போனின் விலை ரூ.89,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ கார்டுகளுக்கு ரூ.7,000 தள்ளுபடி கிடைக்கிறது. (Image Source : Twitter)


Click it and Unblock the Notifications








