Home
Mobile

செம ஸ்டைலான ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் Motorola.! ரெடியா இருங்க.!

மோட்டோரோலா அதன் மடிக்கக்கூடிய Razr ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். பின்பு எச்டிஆர் ஆதரவு, 2640×1080 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடல்.

செம ஸ்டைலான ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் Motorola.! ரெடியா இருங்க.!

குறிப்பாக மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 12எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயர் ரியர் கேமரா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பி கேமரா, டூயல் சிம் ஆதரவு, இசிம் வசதி, 3640 எம்ஏஎச் பேட்டரி,33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்னாப்டிராகன் 8 + 1 ஜென் சிப்செட், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ ஜி பவர் 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 9306என்எம் பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

செம ஸ்டைலான ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் Motorola.! ரெடியா இருங்க.!

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் ஆரம்ப விலை $299.99 (இந்திய மதிப்பில் ரூ.24,580).

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola razr 40 ultra phone with stunning design will be launched soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X