இந்த Motorola போனை வச்சிருந்த எல்லாரும் உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க.! ஆனா விலை கொஞ்சம் ஓவர்..
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு, தரமான மென்பொருள் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் மோட்டோரோலா நிறுவனம் போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் ஒரு புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா என்கிற போல்டபில் போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் ஆனது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் 3.6-இன்ச் வெளிப்புற டிஸ்பிளே வசதியும் உள்ளது. இதன் வெளிப்புற டிஸ்பிளே ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

மிகவும் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் உடன் அட்ரினோ 730ஜிபியு வசதியும் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். குறிப்பாக இதன் பிராஸசர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு Moto MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மூலம் இந்த போன் இயங்குகிறது.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
3800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 33 வாட்ஸ் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 5 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்குகிறது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன்.

12எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா போன். எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இந்த போல்டபில் போன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் ரூ.80,000-க்கு கீழ் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications