சிட்டாக பறக்கும் ஆர்டர்.. pOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. மோட்டோரோலா போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?
இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 13எம்பி கேமரா, 33 வாட்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் ஆனது இந்தியாவில் ரூ.89,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு ரூ.20,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ரூ.69,999 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 40 Ultra specifications): 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். பின்பு இந்த போனில் 3.6-இன்ச் வெளிப்புற டிஸ்பிளே வசதியும் உள்ளது. இதன் வெளிப்புற டிஸ்பிளே ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8 Gen 1) பிராசஸர் உடன் அட்ரினோ 730ஜிபியு வசதியும் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். குறிப்பாக இதன் பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு Moto MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மூலம் இந்த போன் இயங்குகிறது.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதி மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் 3800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 33 வாட்ஸ் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 5 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்குகிறது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் 12எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா போன். எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








