Home
Mobile

ஜன.12 மிரளும்.. pOLED டிஸ்பிளே.. 3800mAh பேட்டரி.. ULTRA ஸ்லிம்.. எந்த மாடல்?

ஃபிளிப் போன் பிரியர்களைடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) போனில் புதிய கலர் வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் விலை, விற்பனை, முழு அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ.

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 40 Ultra Specifications): இந்த போனில் 6.9 இன்ச் (2640 ×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃப்ளெக்ஸ்வியூ (FlexView) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஐர் 10பிளஸ் (HDR 10+) சப்போர்ட் உள்ளது.

ஜன.12 மிரளும்.. pOLED டிஸ்பிளே.. 3800mAh பேட்டரி.. ULTRA ஸ்லிம் போன்!

அதேபோல டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதுவே, அவுட்டர் டிஸ்பிளேவை பொறுத்தவரை 3.6 இன்ச் (1056 × 1066 பிக்சல்கள்) குயிக்வியூ (QuickView) பிஓஎல்இடி (pOLED) பேனல் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ பி3 கலர் காமட், 1100 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பக்காவான அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கவில்லை. ஆகவே, ஈசிம் மற்றும் நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) மட்டுமே கொண்டுள்ளது.

ஜன.12 மிரளும்.. pOLED டிஸ்பிளே.. 3800mAh பேட்டரி.. ULTRA ஸ்லிம் போன்!

இந்த போனில் 12 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த வைடு ஆங்கிள் கேமராவில் மேக்ரோ ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட கேமராவாரும். அதேபோல, 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த மோட்டோரோலா போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6இ, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. 33W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 3800mAh பேட்டரி வருகிறது. அதோடு 5W வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டோரோலா போனில் விவா மெஜந்தா (Viva Magenta) மற்றும் இன்பினிட் பிளாக் (Infinite Black) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகிறது. இப்போது, பீச் ஃபஸ் (Peach Fuzz) என்னும் புதிய கலர் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கலரில் ஜனவரி 12ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.

அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா பீச் ஃபஸ் கலர் வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.69,999 விலைக்கு விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் ஃபிளிப் போன் வாங்க இருப்பவர்களுக்கு இந்த புது வேரியண்ட் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 40 Ultra Peach Fuzz Color Option Sale on Amazon From January 12 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X