கலக்குற சந்துரு.. Motorola Razr 40 Ultra-வின் புதிய கலர் ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?
மோட்டோரோலாவின் லேட்டஸ்ட் க்ளாம்ஷெல் ஃபோல்டபிள் போனாக (Clamshell Foldable Phone) மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகமானது. ஆரம்பத்தில் இது 2 கலர் ஆப்ஷன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது மூன்றாவது கலர் ஆப்ஷனை பெற்றுள்ளது.
முன்னதாக மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ்.. இன்ஃபினைட் பிளாக் (Infinite Black) மற்றும் விவா மெஜந்தா (Viva Magenta) என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் புதிய க்ளேசியர் ப்ளூ (Glacier Blue) கலர் ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று கலர் ஆப்ஷன்களுமே தற்போது அமேசான்.இன் வலைத்தளம் (Amazon.in Website) வழியாக வாங்க கிடைக்கிறது மற்றும் அனைத்துமே ரூ.79,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒருவேளை இதே விலையில் நீங்கள் வேறு நிறுவனத்தின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் டெக்னோ ஃபாண்டம் வி ஃபோல்ட் 5ஜி (TECNO Phantom V Fold 5G) ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். தற்போது இது அமேசான் வலைதளத்தில் ரூ.78,499 என்கிற சலுகை விலையின்கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate) மற்றும் 1,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் (1200 Nits Peak Birghtness) உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி இன்னர் டிஸ்பிளேவை (FHD+ pOLED Inner Display) கொண்டுள்ளது.
அவுட்டர் டிஸ்பிளேவை (Outer Display) பொறுத்தவரை, இது 1056 x 1066 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 3.6-இன்ச் பிஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ராவின் கவர் பேனல் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் (Corning Gorilla Glass Victus protection) வருகிறது.

ப்ராசஸர், ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது அட்ரெனோ 730 ஜிபியு (Adreno 730 GPU), 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (4nm Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோரோலோ ரேஸர் 40 அல்ட்ராவில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual rear camera setup) உள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (optical image stabilisation) ஆதரவுடன் 12 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் (இன்னர் டிஸ்பிளேவில்) 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ராவில் 30வாட்ஸ் வயர்டு (30W Wired) மற்றும் 5வாட்ஸ் வயர்லெஸ் (5W Wireless) சார்ஜிங் ஆதரவுடன் 3800mAh பேட்டரியை பேக் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கை (IP52 Rating) பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் (Android 13 Out of box) இயங்குகிறது. மேலும் பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் (Finger Print Sensor) கொண்டுள்ளது. கடைசியாக மோட்டோரோலாவின் இந்த க்ளாம்ஷெல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் எடை 189 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications