சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா இருக்கு.. புதிய நிறங்கள்.. அறிமுகமானது மோட்டோரோலா போன்கள்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) மற்றும் மோட்டோ எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களும் தரமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா மற்றும் மோட்டோ எட்ஜ் 40 நியோ போன்கள் தற்போது புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதவாது இதுவரை மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா போன் இன்ஃபினைட் பிளாக், கிளேசியர் ப்ளூ மற்றும் விவா மெஜந்தா நிறங்களில் மட்டுமே கிடைத்தது.

மேலும் மோட்டோ எட்ஜ் 40 நியோ போன் ஆனதுசோதிங் சீ (Soothing Sea), கேனீல் பே (Caneel Bay) மற்றும் பிளாக் பியூட்டி (Black Beauty) நிறங்களில் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா மற்றும் மோட்டோ எட்ஜ் 40 நியோ போன்கள் தற்போது பான்டோன் பீச் ஃபஸ் (PANTONE Peach Fuzz) நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய நிறம் ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக பான்டோன் பீச் ஃபஸ் (PANTONE Peach Fuzz)நிறம் கொண்ட மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா மற்றும் மோட்டோ எட்ஜ் 40 நியோ போன்கள் வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த போன்கள் புதிய நிறத்தில் வெளிவந்தாலும் அதே பழைய விலை மற்றும் அம்சங்களுடன் தான் விற்பனைக்கு வரும் என்று மோட்டோரோலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா போன் ரூ.89,999 விலையிலும், மோட்டோ எட்ஜ் 40 நியோ ரூ.23,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது மோட்டோ எட்ஜ் 40 நியோ போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Moto Edge 40 Neo specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்(Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன். அதோடு மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதில் மேக்ரோ மற்றும் டெப்த் லென்ஸ் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா இதில் உள்ளது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது.
டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களைப் பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








