என்னா மினுக்கு! ஒரே போனில் 2 OLED டிஸ்பிளே! அதுவும் பிளிப் மாடல்! விலை எவ்வளோ இருக்கும்?
சும்மாவே பிளிப் (Flip) போன்களை பார்த்தால், வாங்க வேண்டும் என்று தோன்றும், ஏனென்றால் அவற்றின் டிசைன் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கும். அதுவும் 2 டிஸ்பிளே உடன் வந்தால், கதை முடிந்தது. அப்படியான போன்களுடன் இந்தியாவில் தேதி குறித்திருக்கிறது, மோட்டோரோலா (Motorola) நிறுவனம்.
பிளிப் போன் மாடல்களிலேயே பிரம்மாண்ட டிஸ்பிளே கொண்ட போனாக மோட்டோரோலா ரேசர் 40 (Motorola Razr 40) மற்றும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) போன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன்களின் இந்திய வெளியீட்டு தேதி, இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அந்த போனின் அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மோட்டோரோலா ரேசர் 40 அம்சங்கள்: இந்த போன் 6.9 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த போனின் கவர் டிஸ்பிளே (Cover Display) 1.5 இன்ச் உள்ளது. இதுவொரு செகண்டரி டிஸ்பிளேயாகும். ஆண்டிராய்டு 13 உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் வருகிறது.
அட்ரினோ 644 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Adreno 644 GPU) கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4200mAh பேட்டரி வருகிறது. அதோடு 8W வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கிறது. இந்த போன் 64 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது.
32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. அஸூர் கிரே (Azure Gray), செர்ரி பவுடர் (Cherry Powder) மற்றும் பிரைட் மூன் ஒயிட் (Bright Moon White) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.72,050ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
மோட்டோரலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள்: இந்த போன் 6.9 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போனின் கவர் டிஸ்பிளே 3.6 இன்ச் அளவில் உள்ளது. இந்த டிஸ்பிளே 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.
இந்த போனில் ஆண்டிராய்டு 13 உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 3800mAh பேட்டரி வருகிறது. அதோடு 5W வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கிறது.
இந்த போன் 12 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. ஃபெங்யா பிளாக் (Fengya Black), ஐஸ் கிரிஸ்டல் ப்ளூ (Ice Crystal Blue) மற்றும் மெஜந்தா ஸ்ஷேட்ஸ் ( Magenta shades) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது. வரும் ஜூலை 6ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.


Click it and Unblock the Notifications








