சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்-க்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோரோலா ரேசர்! முன்பதிவு துவங்கியது!

|

மோட்டோரோலா நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான மோட்டோரோலா போல்டபில் ரேசர் ஸ்மார்ட்போன் ஒரு மாத கால தாமதத்திற்கு பின் தனது விற்பனைக்கான முன்பதிவு தேதியை தற்பொழுது அறிவித்துள்ளது.

மோட்டோரோலா போல்டபில் ரேசர் ஸ்மார்ட் போன்

மோட்டோரோலா போல்டபில் ரேசர் ஸ்மார்ட் போன்

கடந்த மாதம் வெளியிடப்பட வேண்டிய இந்த மோட்டோரோலா போல்டபில் ரேசர் ஸ்மார்ட் போன் சிறிய தாமதத்திற்குப் பிறகு, இப்போது அதன் வெளியீட்டு தேதியைக் வெளியிட்டுள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி இந்த புதிய மோட்டோரோலா போல்டபில் ரேசர் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6ம் தேதி முதல் மோட்டோரோலா விற்பனை மையங்களில் கிடைக்கும்.

முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டது

முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டது

இந்த புதிய மோட்டோரோலா போல்டபில் ரேசர் ஸ்மார்ட்போனின் விற்பனைக்கான முன்பதிவுகள் ஜனவரி 26 முதல் தொடங்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய போல்டபில் ரேசர் போனை ஆர்டர் தேதி முதலில் டிசம்பர் 26ம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது, தற்பொழுது சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியிடப்படவுள்ளது.

MyJio App: சத்தமின்றி ஜியோ பார்த்த வேலை: கடுப்பில் Google Pay & PhonePe.!MyJio App: சத்தமின்றி ஜியோ பார்த்த வேலை: கடுப்பில் Google Pay & PhonePe.!

மோட்டோரோலா போல்டபில் ரேசர் விலை என்ன?

மோட்டோரோலா போல்டபில் ரேசர் விலை என்ன?

மோட்டோரோலா போல்டபில் ரேசர் சாதனத்திற்கான எதிர்பார்ப்பு நிறுவனம் கணிதத்தைவிட அதிகமாக இருப்பதால் மோட்டோரோலா தனது வெளியீட்டு தேதியை மாற்றி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா போல்டபில் ரேசர் ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி ரூ.4 1,499 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

மோட்டோரோலா போல்டபில் ரேசர் போனுக்கான விற்பனை தேதி

மோட்டோரோலா போல்டபில் ரேசர் போனுக்கான விற்பனை தேதி

மோட்டோரோலா போல்டபில் ரேசர் போனுக்கான முன்பதிவுகள் வெரிசோன், வால்மார்ட் மற்றும் மோட்டோரோலாவின் வலைத்தளங்களில் பிரத்தியேகமாகக் ஜனவரி 26ம் தேதி முதல் துவங்குகிறது. பிப்ரவரி 6 முதல் கடைகளிலும் இந்த சாதனம் கிடைக்கும். இருப்பினும், வெளியீட்டு தேதியில் ஒன்றை வாங்குவது எவ்வளவு எளிதானது அல்லது கடினம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது! எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்?வாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது! எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்?

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

மோட்டோரோலாவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த வடிவமைப்பு அசல் மோட்டோ RAZR ஃபிளிப் தொலைபேசியால் ஈர்க்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் நெகிழ்வான 6.2 அங்குல டிஸ்பிளே மற்றும் நவீன ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எப்பொழுது?

இந்தியாவில் எப்பொழுது?

இந்த புதிய மோட்டோரோலா போல்டபில் ரேசர் ஸ்மார்ட்போன் சாதாரண கேமராக்கள் மற்றும் மிட்ரேஞ்ச் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் போன்ற இயல்பான அம்சங்களையே கொண்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் எப்பொழுது கிடைக்கும் என்ற தகவலை மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் எப்பொழுது வெளியிடப்படும் என்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ரேசர்

சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ரேசர்

பிப்ரவரி மாதத்தில் சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபிளிப் போல்டபில் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் உடன் பெரிய போட்டிகளைப் மோட்டோரோலா சந்திக்கும் என்ற வதந்தி பரவியதால், மோட்டோரோலா சாம்சங்கிற்கு முன்னதாக மோட்டோரோலா போல்டப்பில் ரேசர் போனை வெளியிடுகிறது. வெளியான வதந்திகள் உண்மையாக இருந்தால், சாம்சங்கின் போல்டப்பில் போன் வரும் பிப்ரவரி 11 அன்று வெளியிடப்படலாம்.

Best Mobiles in India

English summary
Motorola racer to compete with Samsung Galaxy Z Flip! Pre-booking has begun : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X