Home
Mobile

மோட்டோரோலா ப்ரோ, டெஃபி ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீடு

By Super
மோட்டோரோலா ப்ரோ, டெஃபி ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீடு

வசதிகளை அள்ளித்தரும் ஆன்ட்ராய்டு மொபைல்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். இந்நிறுவனத்தின் மொபைல்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான பெயர் பெற்றது.

இந்த வகையில் மோட்டோரோலா உருவாக்கியுள்ள ப்ரோ ப்ளஸ் மற்றும் டெஃபி ப்ளஸ் ஆகிய இரண்டு மொபைல்களும் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வாடிக்கையாளர் முக்கியமாக எதிர்பார்க்கும் அம்சங்கள் குறித்து ஒப்பீட்டு அலசல்களை இங்கே காணலாம்.

ப்ரோ ப்ளஸ் மற்றும் டெஃபி ப்ளஸ் என்ற இந்த இரண்டு மொபைல்களும் அடிப்படையில் 2.3 வெர்ஷன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் இயங்குதளம் கொண்டது. டெஃபி ப்ளஸ் மொபைலின் திரை 3.7 இஞ்ச் கொண்டது. ஆனால் மோட்டோரோலா ப்ரோ ப்ளஸ் மொபைலின் திரை அளவு சற்று குறைவாக இருக்கிறது.

ப்ரோ ப்ளஸ் மொபைல் 3.1 இஞ்ச் திரை வசதி கொண்டது. இந்த ப்ரோ ப்ளஸ் மொபைல் கியூவர்டி கீப்பேட் வசதியினை கொண்டது. டெஃபி ப்ளஸ் மொபைலில் கியூவர்டி கீப்பேட் கொடுக்கப்படவில்லை.

இந்த இரண்டு மொபைல்களுமே 5 மெகா பிக்ஸல் கேமராவினைக் கொண்டுள்ளது. இதனால் புகைப்படத்திற்கும், வீடியோவிற்கும் பஞ்சமே இருக்காது.

டெஃபி ப்ளஸ் மொபைலில் 6.8 மணி நேரம் டாக் டைமையும் மற்றும் 9.9 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் கொடுக்கும் ஆற்றல் வாய்ந்த 1,700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோரோலா ப்ரோ ப்ளஸ் மொபைலில் 1,550 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் 480 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 325 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கும்.

பேட்டரி வசதியை பொறுத்தவரை டெஃபி ப்ளஸ் மொபைல், ப்ரோ ப்ளஸ் மொபைலை முந்துகிறது. இரண்டு மொபைல்களுமே நெட்வொர்க் வசதியை தரும் வைஃபை தொழில் நுட்பத்தினை பெற்றுள்ளது. புளூடூத் வசதியையும் இந்த ஸ்மார்ட் மொபைல்களில் பெறலாம்.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த மோட்டோரோலா டெஃபி ப்ளஸ் மொபைல் ரூ.19,000 விலையில் கிடைக்கும். மோட்டோரோலா ப்ரோ ப்ளஸ் மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், டெஃபி ப்ளஸ் மொபைலையும் விடவும் ப்ரோ ப்ளஸ் குறைந்த விலையில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X