அடிச்சு புடிச்சு வாங்குவாங்களே.. மீண்டும் வுட்டன் பேக் பேனல்.. புது Motorola போன்.. என்ன மாடல்?
மோட்டோரோலாவின் அடுத்த ஸ்மார்ட்போன் மூலம் மொபைல் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது போல் தெரிகிறது. மோட்டோரோலா நிறுவனம் ஆனது மரப்பட்டை பாணியிலான வுட்டன் பேக் பேனலை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) ஸ்மார்ட்போனாகும். இது ரேஸர் பிளஸ் 2025 (Razr Plus 2025) என்றும் அழைக்கப்படுகிறது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @evleaks வெளியிட்டுள்ள சமீபத்திய ரெண்டர் வீடியோவிபடி - மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஆனது மரத்தால் என பேக் பேனலை பெறும்.

வெளியான ரெண்டர் வீடியோ ஆனது ஒரு தனித்துவமான வுட் டெக்ஷர் -ஐ காட்டுகிறது. இருந்தாலும் கூட குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது உண்மையான மரத்தால் ஆனதா அல்லது மரம் போன்ற உயர்தர சாயலா என்பது தெளிவாக தெரியவில்லை. வீடியோவில் காணப்படும் பளபளப்பான பினிஷ் - அது உண்மையான மரமாக இருக்காது என்பதை குறிக்கிறது. இருந்தாலும் இப்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாது.
அறியாதோர்களுக்கு மோட்டோரோலா நிறுவனம் வுட்டன் பினிஷ்களை கொண்டுவருது புதியதல்ல. மோட்டோ மேக்கர் திட்டத்தின் மூலம் இந்நிறுவனம் அதன் மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கான கஸ்டமைஸ் வுட்டன் பேனல்களை வழங்கியது. இது நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்கள் டிவைஸ்களுக்கு தனித்துவமான மற்றும் பிரீமியம் அழகியலை கொடுத்தது
அதே வரவேற்பு மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கும் கிடைக்க வேண்டும் என்று மோட்டோரோலா நிறுவனம் திட்டமிடுவது போல தெரிகிறது. ஒரு வுட்டன் வேரியண்ட்டை (அல்லது மரத்தை போன்ற பேக் பேனல் கொண்ட வேரியண்ட்டை) மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், மோட்டோரோலா நிறுவனம் மீண்டும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க வுட்டன் பேக் பேனல் ஆனது ஒரு பிரீமியம் ஆப்ஷன் ஆக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அதாவது இது ரேஸர் சீரீஸின் கீழ் உள்ள மற்ற மாடல்களை விட நிச்சயம் விலை அதிகமானதாக இருக்கும். இருப்பினும் தற்போது வரை மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள் குறித்த வேறு எந்த விவரங்களும் இல்லை.
முன்னதாக அறிமுகமான மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 413பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட4-இன்ச் எல்டிபிஓ பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது!
சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டில் இயங்குகிறது, இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் அவுட்டர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இருப்பினும் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் 68W சார்ஜரை அனுப்புகிறது.


Click it and Unblock the Notifications








