உடைந்த ஸ்க்ரீன் தானாகவே ஒட்டிக்கொள்ளும் அம்சம் - இதெப்படி சாத்தியம்.?
ஸ்மார்ட்போன்களின் ஸ்க்ரீனில் விழும் விரிசல்களை, ஸ்மார்ட்போன் தானாகவே குணப்படுத்தும் வடிவமைப்பு தொழில்நுட்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
காதல் உடைந்துபோகும் அதே வலியை ஸ்மார்ட்போன் ஸ்க்ரீன் உடைவதும் தருகிறது - என்பது கொஞ்சம் ஓவர் பில்ட்-அப் ஆக தெரியலாம். ஆனால் ரூ.30,000 அல்லது அதற்கும் மேல் விலைமதிப்பிலான ஸ்மார்ட்போனை வாங்கி அதை தரையில் போட்டு உடைத்து, ஸ்க்ரீனில் விரிசல்களை கண்டவர்களுக்கு காதல் வலியெல்லாம் கொசு கடித்தது போலத்தான் இருக்கும்.

குறிப்பாக விரிசல்கள் கண்டது உங்கள் செண்டிமெண்ட் ஸ்மார்ட்போன் என்றால் உங்களின் இதயமும் சேர்ந்தே உடைவது நிச்சயம். அம்மாதிரியான வலிகளுக்கும், ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனை உடையாமல் பார்த்துக்கொள்வது எப்படியென்ற கட்டுரைகளுக்கும் வேலையிலாது செய்யும் நோக்கத்தில் மோட்டோரோலா அதன் ஒரு புதிய காப்புரிமையை வெளிப்படுத்தியுள்ளது.

குணப்படுத்தும் வடிவமைப்பு
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள காப்புரிமையின் படி, காலப்போக்கில் அதன் ஸ்மார்ட்போன்களின் ஸ்க்ரீனில் விழும் விரிசல்களை, ஸ்மார்ட்போன் தானாகவே குணப்படுத்தும் வடிவமைப்பு தொழில்நுட்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தெர்மல் சைக்கிளிங் செயல்முறை
மோட்டோரோலாவின் இந்த செயல்முறை கூறப்படும் "ஷேப் மெமரி பாலிமர் (shape memory polymer)" என்று அழைக்கப்படுவதை நம்பியிருக்கிறது. அதாவது - சிதைக்கப்படக்கூடிய ஒரு பொருள் ஒரு செயல்முறையின் மூலம் அதன் அசல் வடிவத்தை மீட்டெடுக்க முடியும் தெர்மல் சைக்கிளிங் செயல்முறையின் கீழ் இது சாத்தியமாகும்.

டிஸ்பிளேயில் ஒரு பாதுகாப்பான அடுக்கு
மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த செயல்முறை அடிப்படையிலேயே விரைவான வெப்பம் துண்டுதல் வழியாகவே குறிப்பிட்ட பொருள் அதன் அசல் வடிவத்திற்கு திரும்பும் என்பது தான். இந்த குறிப்பிட்ட வகையான பொருள் ஒரு எல்சிடி அல்லது எல்இடி டிஸ்பிளேயில் ஒரு பாதுகாப்பான அடுக்குகளாக வைக்கப்படலாம்.

பயனரின் உடல் வெப்பம்
மோட்டோரோலாவின் கூற்றுப்படி, நீங்கள் அவசரமாக விரிசல்களை சரிசெய்ய வேண்டுமெனில் அதன் வெளிப்புறமாக லேயரை வெப்பப்படுத்த வேண்டும், ஒரு பயனரின் உடல் வெப்பம் அதற்கு போதுமானதாக இருக்க வேண்டும்.

தடிமனான பாலிமர் அடுக்கு
தெய்வீகமானதொரு அம்சம் போலத்தோன்றும் இது துரதிருஷ்டவசமாக மிக விரைவில் எந்த ஸ்மார்ட்போன்களிலும் பார்க்க முடியாது. ஒரு தடிமனான பாலிமர் அடுக்கு உண்மையில் கோர்லா கண்ணாடியை விட மிகவும் மலிவான இருக்கும் மற்றும் அதை நாமும் உணரலாம் - என்பதில் மட்டும் சந்தேகம் வேண்டாம்.


Click it and Unblock the Notifications