48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும்.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் மோட்டோரோலா பி40 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி ரியர் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போனுக்கு முன்பு மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ், ஜி7 பிளே, ஜி7 பவர் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருந்தபோதிலும் மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போன்
வருகை மிகவும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 675:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு
வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போனில் 48எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4130எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக மோட்டோரோலா பி40 ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று தகவல்
வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications