ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு போட்டியாக வெளிவரும் மோட்டோ பி30.!
இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க வசதியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, தற்சமயம் அசத்தலான மோட்டோ பி30, மோட்டோ இசெட்3, மோட்டோ இ5 பிளஸ் போன்ற மூன்று ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம்
செய்துள்ளது.
குறிப்பாக ஐபோன் சாதனத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது மோட்டோ பி30 ஸ்மார்ட்போன் மாடல், மேலும் பேஸ்அன்லாக் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ பி30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2248×1080 பிக்சல் திர்மானம் மற்றம் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க வசதியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஆப் மற்றும் வீடீயோ கேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மோட்டோ பி30 ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.21,300-ஆக உள்ளது. இந்த மாதம் இறுதியில் மோட்டோ பி30 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








